பிர்பூம் நிலக்கரிவயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிர்பூம் நிலக்கரிவயல் (Birbhum Coalfield) இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்காள மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெரிய நிலக்கரி வயலான இங்கு 5 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.[1]

9.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தியூச்சா மற்றும் பச்சமி நிலக்கரித் தொகுதியை வங்காள பிர்பும் நிலக்கரி நிறுவனம் உருவாக்க உள்ளது. 2,102 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ள தியூச்சா பச்சமி நிலக்கரித் தொகுதி நாட்டின் மிகப்பெரிய நிலக்கரித் தொகுதியாகும். 2.6 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ள தேவாங்கஞ்ச் அரின்சிங்க நிலக்கரித் தொகுதி மற்றொரு சாத்தியமான நிலக்கரி இருப்பாகும்.[2][3] இந்த தொகுதிகள் முகமது பசார் சிடி தொகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]