பிரோசு கான் கல்லறை
பிரோசு கான் கல்லறை | |
| ஆள்கூறுகள் | 27°08′16″N 78°00′07″E / 27.1379°N 78.0020°E |
|---|---|
| இடம் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
| வகை | கல்லறை |

பிரோசு கான் கல்லறை (Tomb of Firoz Khan) இந்தியாவின் ஆக்ரா நகரத்தில் உள்ள ஒரு முகலாய கல்லறை ஆகும். இக்கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
வரலாறு
[தொகு]சகாங்கீர் மற்றும் சாச்சகான் ஆட்சியின் போது பிரோசு கான் குவாச்சசாரா ஒரு பிரபுவாக இருந்தார். தனது வாழ்நாளில் தனக்கான கல்லறையைக் கட்டினார். 1647 ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு இங்கு அடக்கம் செய்யப்பட்டார்.[2]
விளக்கம்
[தொகு]பிரோசு கான் கல்லறை முற்றிலும் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு எண்கோணத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கிழக்குப் பகுதியில் ஒரு நுழைவாயில் இணைக்கப்பட்டு, இரண்டு மாடி கட்டமைப்பாகக் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் உண்மையான கல்லறையைக் கொண்ட ஒரு துணைக் கதவாக செயல்படுகிறது.
கிழக்கு நுழைவாயில் ஒரு கம்பீரமான இரட்டை மாடி கட்டமைப்பாகும். பரந்த படிகள் நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்கின்றன.[3][2]
பிரோசு கான் கல்லறை ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கு திசை நோக்கி ஒரு குளம் இருந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archnet > Site > Mausoleum of Firuz Khan". www.archnet.org. Retrieved 2023-10-24.
- 1 2 3 Akhtar, Salim Javed. Mughal City of Agra and its Environs, An Archaeological Survey. pp. 155–158.
- ↑ Nath, R. (1972). Taj Mahal: The Evolution of the tomb in Mughal architecture (PDF). p. 20.