உள்ளடக்கத்துக்குச் செல்

பிரோசாபாத் இரயில் பேரழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரோசாபாத் இரயில் பேரழிவு (Firozabad rail disaster) 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 அன்று இந்தியாவின் வடக்கு இரயிலே பிரிவில் தில்லி-கான்பூர் பாதையில் பிரோசாபாத் நகரத்திற்கு அருகில் [1]நிகழ்ந்தது. பயனிகள் இரயில் ஒன்று பசுவின் மீது மோதிய பின்னர் நிறுத்தப்பட்டதால் இவ்விபத்து நிகழ்ந்தது. விபத்தில் 358 நபர்கள் கொல்லப்பட்டனர்[2] என்று சில தகவல்களும் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று சில தரவுகளும் தெரிவிக்கின்றன.[3] இந்த விபத்து இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடந்தது. மோதிக் கொண்ட இரண்டு இரயில்களும் இந்திய தலைநகர் புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்தன. கான்பூரிலிருந்து வந்துகொண்டிருந்த முதலாவது இரயிலான காலிந்தி விரைவுவண்டி வண்டியை நிறுத்த முடியாமல் பசுவின் மீது மோதியது. இதன் பின்னால் பூரியிலிருந்து வந்துகொண்டிருந்த புருசோத்தமன் விரைவு வண்டி 70 கிலோமீட்டர் வேகத்தில் காலிந்தி விரைவுவண்டியின் மீது மோதியது.[4] by the Purushottam Express from Puri.[1] இவ்வண்டியின் மூன்று பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. பூரியிலிருந்து வந்த விரைவு வண்டியின் இயந்திரமும் முதல் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன. விபத்து நடந்தது அதிகாலை நேரம் 02.55 என்பதால் இரண்டு வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிருந்த சுமார் 2200 பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Feature". Pib.nic.in. Retrieved 2012-09-01.
  2. "The world's worst train accidents since 1900". The Independent (London). https://www.independent.co.uk/news/world/asia/3000-feared-dead-or-injured-in-north-korean-train-crash-756436.html. பார்த்த நாள்: 2012-09-01. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Chronology of railways in India, Part 5 (1995 - present)". Irfca.org. Retrieved 2012-09-01.
  4. "The Leading Emergency Management Site on the Net". Emergency-management.net. Retrieved 2012-09-01.
  5. Roy, Ranjan (1995-08-21). "300 die after Indian train hits cow". The Independent (London). https://www.independent.co.uk/news/world/300-die-after-indian-train-hits-cow-1597260.html. பார்த்த நாள்: 2012-09-01. 

ஆதாரம்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]