பிரைஸ் டிவிட்
இந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்குனர் விக்கிபீடியாவின் குறிப்பிடத்தக்கத் தன்மை குறித்துப் பழக்கப்பட்டவராவதுடன் இதனை நல்லெண்ணத்துடன் உருவாக்கியுள்ளார். விக்கிபீடியாவின் தரத்துக்கு இக்கட்டுரையை உயர்த்த நிறையத் தொகுப்புகள் தேவையாக இருக்கலாம். இதனை உடனே நீக்குவதற்காகக் குறிப்பிடுவதற்கு அவசரப்படவேண்டாம். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இக்கட்டுரையைக் கவனித்து, அதன் பின்னரோ அல்லது உடனடியாகவோ உருவாக்குனருடன் அவரது கட்டுரையின் வளர்ப்புத் திட்டத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உருவாக்குனர் இக்கட்டுரை சம்பந்தமான அவரது பணியைக் கைவிட்டு இருந்தால் மற்றும் நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டதற்குப் பதில் ஏதேனும் அளிக்காவிடின் இக்கட்டுரையை நீக்குவதற்கு அல்லது தற்காலிகமாக நகர்த்தி மேம்படுத்துவதற்குப் பரிசீலனை செய்யலாம். இந்த கட்டுரை AswnBot (பேச்சு | பங்களிப்பு) ஆல் 12 மாதங்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
பிரைஸ் டிவிட் (Bryce De Witt 1923, சனவரி 8) என்பவர் ஈர்ப்பியல் மற்றும் புலக் கொள்கை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]
இவருடைய இயற்பெயர் கால் பிரைஸ் செலிமன் (Carl Bryce Seligman). 1950 ல் தந்தையின் மறைவிற்குப் பின் இவரும், இவரது மூன்று சகோதரர்களும் தாய்வழிப் பெயரான டிவிட் (De Witt) என்பதனைத் தங்களது பெயரோடு இணைத்துக் கொண்டனர். ஐரோப்பாவில் இளம் விஞ்ஞானியாக வலம் வந்த காலத்தில் தனது பெயர் மாற்றத்தின் காரணமாக ஃபெலிக்ஸ் ப்ளோச் (Felix Bloch) என்பாரின் பகைமைக்கு உள்ளாகி, அவருக்கு ஸ்டான்ஃபோர்டு(Stanford) பல்கலைக்கழகத்தில் கிடைக்க வேண்டிய பதவி கிடைக்காததால் ஆஸ்டின் (Austin, Texas) நகரத்திற்குச் செல்ல நேர்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை விமானியாகப் பணியாற்றினார். இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் வல்லுநரான சிசில் டிவி – மொரெட் (Cecile De Witt–Morette) என்பாரை மணந்தார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக தனது 81 ஆவது அகவையில் செப் 23, 2004 ல் மறைந்தார். அவரது இறுதிச் சடங்கினை மனைவி மற்றும் நான்கு குழந்தைகளும் பிரான்ஸில் (France) செய்தனர்.
பணிகள்[தொகு]
பொது சார்பியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இவர் வீலர் (Wheeler) என்பாருடன் இணைந்து பேரண்டம் தொடர்பான அலைக் கொள்கையினையும், சமன்பாட்டையும் வெளியிட்டார். இவருடைய மாணவர் லாரி ஸ்மார் (Larry Smarr) என்பவர் எண்ணியல் தொடர்பான சார்பியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். தனது இளங்கலை மற்றும் முனைவர் பட்டத்தை ஹார்வார்ட் (Harvard University) பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவருடைய வழிகாட்டி ஆசிரியர் முனைவர் ஜூலியன் ஸ்விங்கர் (Julian S. Schwinger). 1987 ஆம் ஆண்டு டிராக் (Dirac) பரிசினையும், 2005 ல் ஐன்ஸ்டீன் பரிசினையும் பெற்றார். அமெரிக்க சஞ்சிகை மற்றும் தேசிய அறிவியல் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.