பிரையன் ஆக்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரையன் ஆக்டன்
பிறப்பு1972/1973 (அகவை 50–51)[1]
மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
கல்விஇளநிலை கணினி அறிவியல்
படித்த கல்வி நிறுவனங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
செயற்பாட்டுக்
காலம்
1992 – தற்போது வரை
அமைப்பு(கள்)சிக்னல் அறக்கட்டளை
அறியப்படுவதுஇணை நிறுவனர், வாட்சப் (2009) சிக்னல் இணை நிறுவனர், சிக்னல் அறக்கட்டளை, (2018)
சொத்து மதிப்புஐஅ$2.5 பில்லியன்
(ஆகஸ்டு 2020)[1]
பட்டம்செயல் தலைவர்[2][3]
வாழ்க்கைத்
துணை
தெகன் ஆக்டன்

பிரையன் ஆக்டன் (Brian Acton) (பிறப்பு: 1972 அல்லது 1973) ஐக்கிய அமெரிக்காவின் கணினி நிரலாக்கர் மற்றும் இணைய தொழில் முனைவோர் ஆவார். இவர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் இளநிலை கணினி அறிவியல் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2018-இல் மோக்சி மர்லின்ஸ்பைக் என்பவருடன் கூட்டாக இணைந்து சிக்னல் அறக்கட்டளையை நிறுவி, அதன் செயல் தலைவராக உள்ளார்.[2][3]இவர் முன்னர் யாகூ! நிறுவ்னத்தில் பணியாற்றிவர். இவர் ஜான் கோயும் என்பவருடன் இணைந்து 2009-இல் வாட்சப் செயலியை நடத்தியவர். 2014-இல் வாட்சப் செயலியை முகநூல் நிறுவனத்திற்கு 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றார். [1] செப்டம்பர் 2017-இல் பிரையன் ஆக்டன் வாட்சப் நிறுவனத்திலிருந்து வெளியேறி, 2018-இல் சிக்னல் செயலியை நிறுவினார்.[4] ஐக்கிய அமெரிககாவின் வணிக இதழான போர்ஸ் கணிப்பின் படி, பிரையன் ஆக்டன், 2020-இல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் (நிகர சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 836-வது இடத்தை கொண்டுள்ளார்.[1]

கொடையாளராக[தொகு]

பிரையன் ஆக்டன் 2014-ஆம் ஆண்டு முதல் தனது மனைவி தெகன் ஆக்டனின் இணைந்து வைல்டு கார்டு எனும் அறக்கட்டளையை நிறுவி[5], அதன் மூலம் சன் லைட், ஆக்டன் குடும்பம் மற்றும் ஒற்றுமை என மூன்று சகோதர அறக்கட்டளை நிறுவினார். [6][7] 2018-இல் இவர் சிக்னல் அறக்கட்டளையை நிறுவினார்.[8]

இதனையும் காண்க[தொகு]

சிக்னல் செயலின் இலச்சினை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையன்_ஆக்டன்&oldid=3700907" இருந்து மீள்விக்கப்பட்டது