பிரையனைட்டு
| பிரையனைட்டு Brianite | |
|---|---|
டேட்டன் விண்கல்லில் இருந்து கிடைத்த பிரையனைட்டின் சிறிய வெள்ளை நுண்படிகங்கள் | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுப்பேட்டு கனிமங்கள் |
| வேதி வாய்பாடு | Na2CaMg(PO4)2 |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது |
| படிக இயல்பு | முனைவாக்கம் பெற்ற ஒளியின் கீழ் தெரியும். மணிகள் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| இரட்டைப் படிகமுறல் | பல்செயற்கை, {100} |
| மோவின் அளவுகோல் வலிமை | 4-5 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 3.0-3.1 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.598, nβ = 1.605, nγ = 1.608 |
| இரட்டை ஒளிவிலகல் | 0.010 |
| 2V கோணம் | 63° முதல் 65° |
| Extinction | 2 முதல் 3° |
| மேற்கோள்கள் | [1][2][3][4] |
பிரையனைட்டு (Brianite) என்பது Na2CaMg(PO4)2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3]பாசுப்பேட்டு கனிமமான இது முதன்முதலில் ஒரு இரும்பு விண்கல்லில் அடையாளம் காணப்பட்டது. [2]இந்த கனிமம் விண்கல் அறிவியலில் முன்னோடியான பிரையன் அரோல்ட்டு மேசனின் (1917–2009) நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிரையனைட்டு கனிமத்தை Bne[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
முதன்முதலில் 1966 ஆம் ஆண்டு ஓகியோவின் மாண்ட்கோமரி மாகாணத்தில் உள்ள டேட்டன் விண்கல்லில் இருந்து கிடைத்ததாகப் பதிவாகியுள்ளது.[2]விண்கல்லுக்குள் பாசுப்பேட்டு முடிச்சுகளில் பிரையனைட்டு காணப்படுகிறது. பனெதைட்டு, விட்லாக்கைட்டு, ஆல்பைட்டு, என்சுடாடைட்டு, சுரைபெர்சைட்டு, காமசைட்டு, டெனைட்டு, கிராஃபைட்டு, சுபாலரைட்டு மற்றும் திராய்லைட்டு போன்ற கனிமங்களுடன் கலந்து பிரையனைட்டு கிடைக்கிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 2.2 2.3 Brianite mineral information and data on Mindat
- ↑ 3.0 3.1 Brianite data on Webmin
- ↑ 4.0 4.1 "Brianite data from the Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2015-01-31.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.