உள்ளடக்கத்துக்குச் செல்

பிரைம் பெயிஜசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரைம் பெயிஜசு
Type of site
கல்விசார் தரவுதளம்
Available inஆங்கிலம்
Founderகிறிஸ் கால்டுவெல்
URLt5k.org
Commercialஇல்லை
Registrationசமர்ப்பித்தலுக்கு மட்டும் [1]
Current statusசெயலில்

பிரைம் பெயிஜசு (The PrimePages) என்பது, பகா எண்கள் குறித்த இணையதளம். இத்தளம் முதலில், டென்னிசி மாகாணத்தின் மார்ட்டின் மாவட்டத்திலுள்ள டென்னிசி பல்கலைக்கழகத்தில், கிறிஸ் கால்டுவெல் என்பாரால் உருவாக்கப்பட்டது.[2] அவர் இத்தளத்தை 1994 முதல் 2023 வரைப் பராமரித்து வந்தார்.

அறியப்பட்ட 5000 மிகப்பெரிய பகாஎண்களின் பட்டியல், சிறப்பு வடிவிலமைந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகாஎண்கள், வெவ்வேறுவகையான பகாஎண்களில் "முதல் இருபது" பட்டியல்கள் ஆகியவற்றை இத்தளம் பராமரித்து வருகிறது. ஜூலை ஆகஸ்ட், 2025 தரவின்படி, 5000 ஆவது பகாஎண்ணானது கிட்டத்தட்ட 746,000 இலக்கங்கள் கொண்டுள்ளது.[3]

பிரைம் பெயிஜசு தளத்தில், பகாஎண்கள் மற்றும் பகாஎண் மெய்யெறிவுதேர்வு குறித்த கட்டுரைகள் உள்ளன. பகாஎண்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான கட்டுரைகள் கொண்ட "பாகஎண் களஞ்சியம்" , குறிப்பிட்ட எண்கள் பற்றிய ஆயிரக்கணக்கான சிறப்புச் சேகரிப்புகள் ஆகியவையும் இத்தளத்தில் உள்ளன.

மார்ச் 11, 2023 முதல், இத்தளத்தின் இணைய முகவரி 'primes.utm.edu' இலிருந்து 't5k.org,' ஆக மாறியது. அதன்பின்னர் இத்தளமானது, கால்டுவெல்லாலும் பராமரிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "PrimePages Privacy Statement". t5k.org. Retrieved ஜனவரி10, 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. ↑ "Chris Caldwell". University of Tennessee at Martin.
  3. ↑ "The Prime Database: Database Search Query". The PrimePages.. Retrieved on 2023-03-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரைம்_பெயிஜசு&oldid=4415999" இலிருந்து மீள்விக்கப்பட்டது