உள்ளடக்கத்துக்குச் செல்

பிரைட்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரைட்ரே (Brightray) என்பது நிக்கல்-குரோமியம் கலப்புலோகம் ஆகும், இது அதிக வெப்பநிலையில் வாயு ஓட்டம் மூலம் உண்டாகும் அரிப்புக்கு எதிர்ப்பைத் தருகிறது என்பதற்காக முக்கியத்துவம் பெறுகிறது[1].1930 களில் இருந்து குறிப்பாக பெட்ரோல் இயந்திரங்களில் வெளியேற்றும் வால்வின் தலைகள் மற்றும் பெட்ரோல் இயந்திரங்களின் அதிலும் குறிப்பாக வானூர்தி இயந்திரங்களின் இருக்கைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. பெர்மிங்காமில் இருக்கும் என்றி விக்கின் நிறுவனம் இதை உருவாக்கியது. இதைத்தவிர இது மேற்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. மின்வெப்ப மூலங்களுக்குத் தேவையான கம்பிகள் மற்றும் இழைகள் தயாரித்தலிலும் இவை பயன்படுகின்றன.

அசல் பிரைட்ரே கலப்புலோகம் 80% நிக்கலும் 20% குரோமியமும் கலந்த கலவையாகும். இக்கலப்புலோகம் இன்றும் பிரைட்ரே எசு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது[2] and can be used at temperatures up to 1050°C. Several other variants are now available. These include nickel-iron-chromium Brightray F[3]. 1500° செல்சியசு வெப்பநிலையில் பயன்படும் இக்கலப்புலோகம் போன்றே வேறு இயைபுகளிலும் காணப்படுகிறது. நிக்கல்-இரும்பு-குரோமியம் பிரைட்ரே எப் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது ஒடுக்கம் மற்றும் ஆக்சிசனேற்றம் இரண்டிலும் சிறந்த தடையை அளிக்கிறது. பிரைட்ரே சி என்பதும் அருமண் தனிமங்கள் சிறிதளவு சேர்ந்த நிக்கல்-குரோமியம் கலப்புலோகமாகும்[4]. இச்சேர்க்கையால் இவற்றின் வாழ்நாள் அதிகரிக்கிறது.


மேற்கோள்கள்

[தொகு]
  1. FJ Camm (January 1944). "Brightray". Dictionary of Metals and Alloys (3rd ed.). p. 25.
  2. "Brightray S" (PDF). Special Metals. Archived from the original (PDF) on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-08-01.
  3. "Brightray F" (PDF). Special Metals. Archived from the original (PDF) on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-08-01.
  4. "Brightray C" (PDF). Special Metals. Archived from the original (PDF) on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரைட்ரே&oldid=3582885" இலிருந்து மீள்விக்கப்பட்டது