உள்ளடக்கத்துக்குச் செல்

பிரைசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரைசைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCa2B5O7(OH)5·H2O[1]
இனங்காணல்
நிறம்வெண்மை; பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் நிறமற்றது
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை3

பிரைசைட்டு (Priceite) என்பது Ca2B5O7(OH)5·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1] வெள்ளை நிறத்திலுள்ள போரேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. செட்கோ, ஓரிகான், டெத் வேலி மற்றும் வடமேற்கு துருக்கி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[2] 1862 ஆம் ஆண்டில் இந்த கனிமத்தின் சிறிய அளவு ஓரிகானின் செட்கோவிலிருந்து வெட்டப்பட்டது.[3]

பிரைசைட்டு கனிமம் அரிதானதாகும். சில தாதுக்களில் மட்டுமே இக்கனிமம் காணப்படுகிறது.[4] கோல்மனைட்டு கனிமத்துடன் பிரைசைட்டு தொடர்பு கொண்டுள்ளது.[5]

பெயர்க்காரணம்

[தொகு]

பிரைசைட்டு கனிமத்தை முதன்முதலில் ஆய்வு செய்த தாமசு பிரைசின் நினைவாக இந்தக் கனிமம் பெயரிடப்பட்டது. துருக்கியில் உள்ள பண்டெர்மா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டபோது முதலில் இந்தக் கனிமத்தின் பெயர் பண்டெர்மைட்டு என இருந்தது.[6] பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிரைசைட்டு கனிமத்தை Pce[7] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Priceite on Mindat".
  2. "Priceite | mineral". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2021-09-03.
  3. Garrett, Donald E. (1998-08-10). Borates: Handbook of Deposits, Processing, Properties, and Use (in ஆங்கிலம்). Elsevier. pp. xiii. ISBN 978-0-08-050021-8.
  4. Panczner, William D. (2013-06-29). Minerals of Mexico (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 301. ISBN 978-1-4757-5848-1.
  5. Rutley, Frank (2012-12-06). Rutley's Elements of Mineralogy (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 316. ISBN 978-94-011-9769-4.
  6. "Priceite". National Gem Lab (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-03-20. Retrieved 2021-09-03.
  7. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரைசைட்டு&oldid=4232717" இலிருந்து மீள்விக்கப்பட்டது