பிரேம் வத்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரேம் வத்சா
Prem Watsa.jpg
பிறப்பு1950 (அகவை 68–69)
தேசியம்கனடா
படித்த கல்வி நிறுவனங்கள்மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகம்
பணிதொழில்முனைவோர்

பிரேம் வத்சா (பிறப்பு 1950, ஐதராபாது, இந்தியா) கனடாவில் உள்ள தொராண்டோ மாநகரத்தில் உள்ள ஃபேர்ஃபாக்சு (Fairfax) என்னும் வணிகநிதி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைப் பொறுப்பாட்சியரும் ஆவார்[1][2][3][4] இவர் கனடாவின் வாரன் பஃபெட்டு ("Canadian Warren Buffett") என்று சிலபொழுது அழைக்கப்படுகின்றார்[5]

பிரேம் வத்சா ஐதராபாதில் உள்ள பேகம்பட்டுப் பகுதி பொதுப்பள்ளியில் பயின்று, பின்னர் சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் வேதிப் பொறியியல் கல்விப் பட்டம் பெற்றார். பின்னர் கனடாவில் உள்ள மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் இரிச்சர்டு ஐவி தொழில்வணிகக் கழகத்தில் நிருவாக மேலாளர் மேற்பட்டம் (MBA) பெற்றார். கனடாவில் நிதி அலசலாளர் ("Chartered Financial Analyst (CFA)" சான்றிதழும் பெற்றார்.[6]. இவர் 1999 இல் இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் சிறப்பாளர் விருது பெற்றார். சூன் 7, 2014 இல் தொராண்டோவில் நடந்த அனைத்து இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தினர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் முன்னாள் இ.தொ.க மாணவர் சிறப்பாளர் விருதை வென்றார். கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் (Chancellor) சூன் 2009 முதல் உள்ளார். தொராண்டோ நோயாளிக்குழந்தைகள் மருத்துவமனையின் பொறுப்பாளுநர் மன்ற உறுப்பினராகவும், மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் இரிச்சர்டு ஐவி தொழிவணிகக் கழகத்தின் அறிவுரையாளர் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். ஒண்டாரியோ வேந்திய காட்சியகத்தின் இயக்குநர் ஆயத்தில் உறுப்பினராகவும், பிளாக்குபெரி வணிக நிறுவனத்தின் இயக்குநர் ஆயத்தின் உறுப்பினராகவும் உள்ளார். கனடாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_வத்சா&oldid=2720538" இருந்து மீள்விக்கப்பட்டது