பிரேமினி தனுஸ்கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரேமினி தனுஸ்கோடி
Premini Thanuskodi
இறப்புசூன் 30, 2006(2006-06-30) (அகவை 25)
வெலிக்கந்தை, பொலன்னறுவை மாவட்டம்
பணிகணக்காளர், மாணவி
பணியகம்தபுக பணியாளர்
சமயம்இந்து

பிரேமினி தனுஸ்கோடி என்பவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் என்ற இலங்கைத் தமிழ் அறக்கொடை நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு கணக்காளர் ஆவார். இவர் 2006 சூன் 30 இல் கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். கிழக்குப் பல்கலைக்கழக மாணவியான இவர் கடத்தப்பட்ட போது வயது 25 ஆகும்.[1]

நிகழ்வு[தொகு]

பிரேமினி தனுஸ்கோடி, 2006 சூன் 30 அன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சிலருடன் கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பின் அருகே வெலிக்கந்தை என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வேளையில் ஒரு வெள்ளை வான் அவர்களைத் தாண்டிச் சென்று நிறுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கியவர்கள் சிலர் வாகனத்துடன் அவர்களைக் கடத்தி அருகில் உள்ள காடொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.[2] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற துணை-இராணுவக் குழுவின் புலனாய்வுத் துறைத் தலைவர் சித்தா என்பவனால் அன்றிரவு முழுவதும் அக்காட்டில் வைத்து அவர்கள் தாக்கப்பட்டு விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டனர். இவ்விசாரணையின் போது சில ஆண் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் பிரேமினி குழுப் பாலுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பின்னர் பற்றை ஒன்றில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.[3][4][5]

எதிர்வினைகள்[தொகு]

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கைக் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்து இந்நிகழ்வுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியது.[6][7] பன்னாட்டு மன்னிப்பு அவையும் புனர்வாழ்வுக் கழகத்தினரின் பாதுகாப்புக் குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.[8]

இலங்கை அரசு இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்த போதும், எவரும் கைது செய்யப்படவோ அல்லது குற்றம் சாட்டப்படவோ இல்லை.[9]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமினி_தனுஸ்கோடி&oldid=3285009" இருந்து மீள்விக்கப்பட்டது