உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேமா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரேமா சீனிவாசன் (Prema Srinivasan) என்பவர் இந்தியக் குழந்தைகள் எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சீனிவாசன் ஆங்கிலத்தில் குழந்தைகள் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பிரேமா சீனிவாசன் இந்தியாவில் ஆங்கிலத்தில் குழந்தைகள் புனைகதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இதில் 1998-இல் டி. ஆர். வெளியீடுகள் வெளியிட்ட போக்குகளும் மையக்கருக்களும் அடங்கும்.[1]

இந்தியாவின் முன்னணித் தேசிய நாளிதழான தி இந்துவில் குழந்தைகள் புத்தகங்களைத் தொடர்ந்து விமர்சிப்பவர் சீனிவாசன். இவர் தி இந்துவின் "யங் வேர்ல்ட் இணைப்பு" இதழில் வெளியிடப்பட்ட " ட்ரெஷர் ஹண்டர்ஸ்" என்ற குழந்தைகளுக்கான நாவலை எழுதியுள்ளார்.

இவரது மற்றப் படைப்புகளில், ஆத்திரேலிய எழுத்தாளர் லிபி ஹாத்தோர்னின் தண்டர்வித்தை 2001-ஆம் ஆண்டில் பழனியப்பா பிரதர்சு இடியோசை என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தனர். இவரது சமீபத்திய தமிழ் மொழிபெயர்ப்புப் படைப்பான மதராசில் மிருது, அல்லது மெட்ராசில் மிருது என்பது வசந்த சூர்யாவால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

சீனிவாசனின் பயணக் குறிப்பு (2009), "ஃபுட்லூசு அண்ட் ஃபேன்சி-ஃப்ரீ", ஒரு பயணத் தொகுப்பாகும். இது தி இந்துவில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.[2]

இவரது வெளியீடான "எ விஷனரி'ஸ் ரீச்", இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமினால் சனவரி 7, 2014 அன்று சென்னை, தொழில்நுட்பக் கழகத்தில் (தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி) வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம், 1949-ஆம் ஆண்டு தனது அரண்மனை மாளிகையான இந்தியா இல்லத்தினை விற்று இந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய சின்னசாமி ராஜமின் (சீனிவாசனின் தாத்தா) வாழ்க்கைக் கதையைக் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தில் அப்துல் கலாம் உட்படப் பல பங்களிப்பாளர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். முன்னுரை, முடிவுரை மற்றும் முதல் அத்தியாயத்தை எழுதிய பிரேமா சீனிவாசன், இந்தப் புத்தகத்தைத் தனது தந்தையின் நினைவாக அர்ப்பணித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Children's Fiction in English in India, Trends and Motifs - by Prema Srinivasan".
  2. "The Hindu : Literary Review / Book Review : Traveller's tales". www.hindu.com. Archived from the original on 6 November 2012. Retrieved 17 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமா_சீனிவாசன்&oldid=4417917" இலிருந்து மீள்விக்கப்பட்டது