பிரேபல் நட்சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
An out-of-focus close-up of a part of a Christmas tree with glitter garlands and blurry decoration. In-focus in the left half of the picture, suspended from one of the twigs, is a red cardboard-woven Froebel star. Four tips and seven prongs are visible.
கிறிஸ்துமஸ் விழா அலங்காரத்தின் ஓர் அங்கமான ஃபிரேபல் நட்சத்திரம்

ஃப்ரோய்பெல் நட்சத்திரம் (Froebel Star) (இடாய்ச்சு மொழி: Fröbelstern) என்பது காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்துமஸ் அலங்காரமாகும், இது ஜெர்மனியில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது[1]. ஆங்கிலத்தில் இதற்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பெயர் இல்லை; இதை வருகையின் நட்சத்திரம் டேனிஷ் நட்சத்திரம்,ஜெர்மன் நட்சத்திரம், நோர்டிக் நட்சத்திரம், பென்சில்வேனிய நட்சத்திரம், போலந்து நட்சத்திரம்,ஸ்வீடிஷ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் நட்சத்திரம், அல்லதுஃப்ரோய்பெல் நட்சத்திரம், என்று அறியப்படுகிறது. [2] இது சில நேரங்களில் மொராவியன் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, இருப்பினும் மொராவியன் நட்சத்திரம் வடிவியல் வடிவங்களின் பொதுவான வகையாகும், மேலும் பதினாறு முனையுடைய ஓரிகாமி துண்டு குறிப்பாக ஃப்ரோய்பெல் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது[3].

விளக்கம்[தொகு]

ஃபிரேபல் நட்சத்திரம்

முப்பரிமாண ஃப்ரோய்பெல் நட்சத்திரம் நான்கு ஒத்த காகித கீற்றுகளிலிருந்து 1:25 முதல் 1:30 வரை அகல நீள விகிதத்துடன் கூடியது.[2] நெசவு மற்றும் மடிப்பு செயல்முறை சுமார் நாற்பது படிகளில் நிறைவேற்றப்படலாம். இதன் தயாரிப்பு முறையானது எட்டு தட்டையான முனைகள் மற்றும் எட்டு கூம்பு வடிவ குறிப்புகள் கொண்ட ஒரு காகித நட்சத்திரமாகும். இந்த எட்டு காகித மடிப்புகளும் நடுப்பகுதியில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் கூம்புகள் இல்லாத இரு பரிமாண எட்டு முனை நட்சத்திரத்தை உருவாக்கப்படுகிறது.[4]

ஃப்ரோய்பெல் நட்சத்திரங்களை உருவாக்குதல் ஜெர்மன் நாட்டுப்புறக் கலையாகும். பாரம்பரியமாக நட்சத்திரங்கள் மடிக்கப்பட்ட பின் மெழுகில் நனைக்கப்பட்டு பின் மினுமினுப்புகள் தெளிக்கப்படும்.[5] இந்த நட்சத்திரம் ஒரிகாமியின் ஒரு வடிவமாகக் கருதப்டுகிறது.[6] ஏனெனில் இது ஒரே மாதிரியான காகிதத் தாள்களால் ஆனது மற்றும் பசை இல்லாமல் மடிக்கப்படக்கூடியது. [7]

வரலாறு[தொகு]

Froebel stars made from lauhala in Puna, Hawaiʻi

மழலையர் பள்ளி கருத்தாக்கத்தின் நிறுவனர் ,ஜெர்மன் கல்வியாளர் பிரீட்ரிச் புரோபெல் (1782–1852) பெயரை ஃப்ரோய்பெல் நட்சத்திரம் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு எளிய கணிதக் கருத்துக்களை தெரிவிக்கும் நோக்கத்துடன்முன்-தொடக்கக் கல்வியில், காகித மடிப்புகளைப் பயன்படுத்துவதை அவர் ஊக்குவித்தார். [4][8]எவ்வாறாயினும், இந்த நட்சத்திர தயாரிப்பை ஃப்ரோய்பெல் கண்டுபிடிக்கவில்லை என்றும் அது ஏற்கனவே நீண்ட காலமாக பொது அறிவின் எல்லைக்குள் இருந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. ஃபிராய்பெல் சிறு குழந்தைகளுக்கான ஒரு செயலாக காகித மடிப்பை ஊக்குவித்தார், மேலும் அவர் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்த சொற்பொழிவை பிரபலப்படுத்தினார், இதுதான் அவரது பெயரும் மடிப்பு வழிமுறைகளும் தொடர்புடையதாக இருக்கலாம். [8][9]

ஒரு ஃப்ரோபெல் நட்சத்திரத்தை எவ்வாறு மடிப்பது என்பது பற்றிய விளக்கங்கள் குறைந்தது 19 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவையாக இருக்கலாம். [10] ஜெர்மனியில் ஃப்ரெபெல்ஸ்டெர்ன் என்ற பெயர் 1960 களில் இருந்து இந்த காகித அலங்காரத்திற்கான பொதுவான பெயராக இருந்து வருகிறது. இது கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மலர் வளையங்களில் ஒரு ஆபரணமாகவும், மாலைகள் மற்றும் சிற்பங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஃப்ரோய்பெல் நட்சத்திரங்கள் ஜெர்மனியில் மிகவும் பொதுவானவை, [11] இருப்பினும் சிலருக்கு மட்டுமே அவற்றை எவ்வாறு உருவாக்குவது என்பது தெரியும். [2][12]

சான்றுகள்[தொகு]

 1. "Er bastelt 'Sterne der Hoffnung', um Freude zu schenken" (in German). Hamburger Abendblatt. 7 November 2009. http://www.abendblatt.de/hamburg/von-mensch-zu-mensch/article1261846/Er-bastelt-Sterne-der-Hoffnung-um-Freude-zu-schenken.html. 
 2. 2.0 2.1 2.2 Köller, Jürgen (1999). "Fröbelstern" (in German). mathematische-basteleien.de. 16 December 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
 3. "Strip Folding". Origami Resource Center. 27 டிசம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. 4.0 4.1 Geisler, Hildegard (December 2000). "TUC Adventskalender 2000 - Weihnachtsland Erzgebirge" [CUT Advent calendar 2000 - Christmas country Ore Mountains] (in German). Chemnitz University of Technology. 16 December 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
 5. Ackerman-Haywood, Jennifer (18 December 2011), "Cascade Township woman makes German stars, wooden dulcimers", The Grand Rapids Press, Grand Rapids, Michigan, 19 December 2011 அன்று பார்க்கப்பட்டது
 6. Thiemig, Hannah (12 November 2009). "Mit einem Fröbelstern fing alles an" (in German). Weser-Kurier. Archived from the original on 8 ஜூலை 2012. https://web.archive.org/web/20120708072837/http://www.weser-kurier.de/Druckansicht/Bremen/Stadtteile/Seehausen/61922/Mit+einem+Froebelstern+fing+alles+an.html. 
 7. Hatori Koshiro. "History of Origami". K's Origami. 19 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
 8. 8.0 8.1 Wiggin, Kate Douglas; Smith, Nora Archibald (1900). Froebel's Occupations. Houghton Mifflin & Co.. பக். 214–225. https://books.google.com/books?id=qMYjxwQBm2gC&q. 
 9. Lister, David. "The Swedish Star". British Origami Society. 1 டிசம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 December 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 10. Barth, E; Niederley, W (1891) (in German). Des Kindes erstes Beschäftigungsbuch (4 ). published on http://www.mathematische-basteleien.de/froebelstern.htm: Velhagen & Klasing. பக். 24 and title page. http://www.mathematische-basteleien.de/froebelstern.htm. பார்த்த நாள்: 16 December 2011. 
 11. "Weihnachtsausstellungen. Sterne und Krippen" (in German). Frankfurter Rundschau. 16 December 2009. http://www.fr-online.de/offenbach/weihnachtsausstellungen-sterne-und-krippen,1472856,3051036.html. 
 12. "Friedrich Froebel created Kindergarten and designed the Froebel gifts and blocks". Froebel Web. 21 December 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேபல்_நட்சத்திரம்&oldid=3287863" இருந்து மீள்விக்கப்பட்டது