பிரேசில் தேசியப் பேராயம்
பிரேசில் தேசியப் பேராயம் National Congress of Brazil காங்கிரசோ நேசியோனல் டொ பிராசில் | |
---|---|
54வது சட்டமன்றம் | |
![]() | |
வகை | |
வகை | |
அவைகள் | பிரேசிலின் மேலவை (செனட்டு) பிரேசிலின் கீழவை (சாம்பர் ஆஃப் டெபுடீசு) |
தலைமை | |
மேலவைத் தலைவர் | ரெனான் காலீய்ரோசு (பிரேசிலிய மக்களாட்சி இயக்கக் கட்சி (PMDB) பெப்ரவரி 1, 2013 முதல் |
கீழவைத் தலைவர் | என்றிக்கு எதுவர்தொ ஆல்வெசு (பிரேசிலிய மக்களாட்சி இயக்கக் கட்சி (PMDB) பெப்ரவரி 4, 2013 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 594 81 செனட்டர்கள் 513 டெபுடீசு |
![]() | |
செனட்டு அரசியல் குழுக்கள் | |
![]() | |
சாம்பர் ஆஃப் டெபுடீசு அரசியல் குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
அண்மைய செனட்டு தேர்தல் | அக்டோபர் 3, 2010 |
Last சாம்பர் ஆஃப் டெபுடீசு election | அக்டோபர் 3, 2010 |
கூடும் இடம் | |
![]() | |
தேசியப் பேராயக் கட்டிடம் பிரசிலியா, கூட்டரசு மாவட்டம், பிரேசில் | |
வலைத்தளம் | |
செனட்டு சாம்பர் ஆஃப் டெபுடீசு |
பிரேசில் தேசியப் பேராயம் (போர்த்துக்கேய மொழி: Congresso Nacional do Brasil) பிரேசிலின் கூட்டாட்சி அரசின் சட்டவாக்க அவை ஆகும். மாநிலங்கள் மற்றும் நகர மன்றங்களில் ஓரவை முறைமையே இருக்க கூட்டாட்சிப் பேராயம் ஈரவை முறைமையைப் பின்பற்றுகின்றது. பிரேசிலின் செனட்டு என்ற மேலவையும் சாம்பர் ஆஃப் டெபுடீசு என்ற கீழவையும் பேராயத்தின் அங்கங்களாக உள்ளன.
செனட்டில் 26 மாநிலங்களுக்கும் கூட்டரசு மாவட்டத்திற்கும் சார்பான உறுப்பினர்கள் உள்ளனர்; ஒவ்வொரு மாநிலம்/கூட்டரசு மாவட்டமும் தலா மூன்று உறுப்பினர்களை பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும். இவர்களது பதவிக்காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை மூன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மாற்றப்படுகின்றனர். ஒரு மாநிலத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு வழங்கப்படுகிறது; ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும்போது வாக்காளருக்கு இரு வாக்குகள் வழங்கப்படுகின்றது. அச்சமயம் வாக்காளர் தனது இரு வாக்குகளையும் ஒருவருக்கே அளிக்கவியலாது. ஆனால் மூன்றில் இரண்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும்போது அரசியல் கட்சிகள் இரு வேட்பாளர்களை நிறுத்தலாம்.
சாம்பர் ஆஃப் டெபுடீசு என்ற கீழவை உறுப்பினர்கள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். செனட்டைப் போலன்றி கீழவை முழுமையாக ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது.
இந்த ஈரவைகளும் அடங்கியப் பேராயம் ஆண்டுதோறும் பிரசிலியாவில் தனக்கான கட்டிடத்தில் பெப்ரவரி 2 முதல் சூலை 27 சூலை வரையும் ஆகத்து 1 முதல் திசம்பர் 22 வரையும் கூடுகிறது.
கீழவைத் தலைவர் குடியரசுத் தலைவருக்கு அடுத்து இரண்டாவது நிலையிலும் மேலவையின் தலைவர் (இவரே பேராயத்தின் தலைவருமாவார்) மூன்றாவது நிலையிலும் உள்ளனர்.[1]
காட்சிக்கூடம்
[தொகு]-
சாம்பர் ஆஃப் டெபுடீசு (கீழவை)
-
செனட்டு (மேலவை)
-
குழு கூட்டரங்கம்
-
மழைநாளில் வெளித்தோற்றம்
-
இரவில் பேராயம்
-
முகப்பு
-
பிறிதொருத் தோற்றம்
15°47′59″S 47°51′51″W / 15.79972°S 47.86417°W