பிரேக்கிங் இன் (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேக்கிங் இன்
Breaking In
படத்தின் சுவரிதழ்
இயக்கம்ஜேம்ஸ் மெக்டெய்க்
தயாரிப்பு
  • கேப்ரியல் யூனியன்
  • ஜேம்ஸ் லோபஸ்
  • கிரேக் பெர்ரி
  • ஷீலா ஹனஹான் டெய்லர்
  • விக்கர் பேக்கர்
திரைக்கதைரியான் எங்கிள்
இசைஜானி க்ளிமேக்
நடிப்புகேப்ரியல் யூனியன்
ஒளிப்பதிவுடோபி ஆலிவர்
படத்தொகுப்புஜோசப் ஜெட் சாலி
கலையகம்
  • வில்பர் புரொடக்சன்ஸ்[1]
  • Practical Pictures
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுமே 11, 2018 (2018-05-11)
நாடுஐக்கிய அமேரிக்கா
மொழிஆங்கிலம்

பிரேக்கிங் இன் (Breaking In) 2018 ஆண்டு வெளியாக இருக்கும் அமேரிக்க மயிர் கூச்சசெரியும் திரைப்படம். இதை ஜேம்ஸ் மெக்டெய்க் இயக்கியுள்ளார். படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் கேப்ரியல் யூனியன் நடித்ததுள்ளார். படத்தை வில்லே பாக்கர், ஜேம்ஸ் லோபஸ், கிரெய்க் பெர்ரி மற்றும் ஷீலா டெய்லருடன் இணைந்து யூனியன் தயாரித்து உள்ளனர்.[2]

கதை[தொகு]

பதின்ம வயது குழந்தைகளின் தாயான காப்ரியல், தன் தந்தையின் மறைவை அடுத்து அவரது சொத்துகள் குவிந்திருக்கும் வனாந்தர வீட்டுக்கு வருகிறார். வெளியாட்கள் எளிதில் ஊடுருவ முடியாத நவீனப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அந்த வீட்டில் அம்மாவும் குழந்தைகளும் உற்சாகமாகப் புழங்கத் தொடங்குகின்றனர். அப்போது காப்ரியலின் தந்தை பதுக்கி வைத்திருக்கும் பணக்குவியலை அபகரிக்க கொடூரக் குற்றவாளிகள் நால்வர் நள்ளிரவில் அந்த வீட்டை சுற்றி வளைக்கிறார்கள்.

திட்டமிட்டு வீட்டினுள் ஊடுருவும் கொள்ளையர்கள், காப்ரியலின் குழந்தைகளைப் பணயமாக்கி பணக் கொள்ளையில் முன்னேறுகிறார்கள். எதிர்பாராதவிதமாக வீட்டுக்கு வெளியே மாட்டிக்கொள்ளும் காப்ரியல் தன் குழந்தைகளை மீட்கத் துணிகிறார். தன்னாலான புத்தியையும் சக்தியையும் திரட்டி, வீட்டின் நவீன பாதுகாப்பு அம்சங்களைத் தகர்த்து உள்ளே நுழைவதுடன், கொள்ளையர்களையும் நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்.

தயாரிப்பு[தொகு]

பிரேக்கிங் இன் முதன்மையான ஒளிப்படப் பிடிப்பு 2017 சூலையில் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மாலிபு, கலிபோர்னியாவில் தொடங்கியது.[3]

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை 2018 சனவரி 11 அன்று வெளியிட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. wilsonmorales (2017-05-31). "Gabrielle Union To Star & Produce "Breaking In" With Will Packer - blackfilm.com/read | blackfilm.com/read". Blackfilm.com. 2017-09-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. Amanda N'Duka (2017-05-30). "Gabrielle Union Reunited W/ Will Packer To Produce & Star In 'Breaking In'". Deadline. 2017-09-04 அன்று பார்க்கப்பட்டது. More than one of |author= மற்றும் |last= specified (உதவி)
  3. "'Girls Trip' producer Will Packer finds success by targeting an underserved audience". LA Times. 2017-09-04 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Breaking In - Official Trailer [HD". YouTube. 2018-01-11. 2018-01-18 அன்று பார்க்கப்பட்டது.