பிரெல்லி நாட்காட்டி
பிரெல்லி நாட்காட்டி (The Pirelli Calendar) பிரெல்லி நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியத் துணைநிறுவனம் வெளியிடும் ஓர் வணிக நாட்காட்டியாகும். 1964ஆம் ஆண்டு முதல் இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.மிகக் குறைவான அளவில் வெளியிடப்படும் இந்த நாட்காட்டி சந்தையில் விற்பனைக்கில்லாது பிரெல்லி நிறுவனத்தின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் மட்டுமே விநியோகிக்கப் படுகிறது.ஆகவே இதற்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் உலகின் சிறந்த பெண் வடிவழகிகளின் கவர்ச்சியான,சில கலைநயம் மிக்க நிர்வாண ஒளிப்படங்கள் உட்பட, ஒளிப்படங்களைத் தாங்கி வருவதும் இதன் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.
1973ஆம் ஆண்டு எண்ணெய் அதிர்ச்சியை அடுத்து ஏற்பட்ட உலக பொருளாதாரத் தேக்கத்தின் தாக்கமாக பிரெல்லி இந்த நாட்காட்டி வெளியீட்டை நிறுத்தி யிருந்தது.பத்தாண்டுகள் கழித்து இதனை வெளியிடுவதை மீண்டும் துவங்கியது.தற்போது இது ஆண்டுதோறும் தடையின்றி வெளியிடப்படுகிறது.
இந்த நாட்காட்டியில் இடம்பெறுவதை ஓர் சிறப்பு என ஒளிப்பட வடிவழகிகள் கருதுகிறார்கள். அவ்வாறே தாங்கள் எடுத்த ஒளிப்படங்கள் வருவதையும் ஒளிப்பட வல்லுனர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.
உசாத்துணைகள்
[தொகு]- "The myth of the Pirelli Cal". Pirelli - Calendar. பார்க்கப்பட்ட நாள் December 12, 2007.;
- "The Cal: a collection of masterpieces". Pirelli. பார்க்கப்பட்ட நாள் December 12, 2007.
- Hargreaves, Steve (February 15, 2005). "Pinups for the auto elite". CNNMoney. http://money.cnn.com/2005/02/08/pf/autos/pirelli_calendar/.