பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் (ஆங்கிலம்: The Charter of the French Language, பிரெஞ்சு: La charte de la langue française) என்பது கனடாவின், கியூபெக் மாகாணத்தின் பயன்பாட்டு மொழி தொடர்பான ஒரு முக்கிய சட்ட வெளிப்பாடு ஆகும். கியூபெக் மாகாணத்தில் பெரும்பான்மையிரால் பேசப்படும் பிரெஞ்சு மொழியின், மொழியினரின் உரிமைகளை இது உறுதி செய்கிறது. கியூபெக் மாகாணத்தின் மொழிக் கொள்கையின் முதன்மைப் பகுதி இதுவாகும்.

இச் சட்டம் பிரெஞ்சு மொழியை வேலையில், கல்வியில் வணிகத்தில், தொடர்பாடலில், அரசில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மொழியாக ஆக்குவதை நோக்கக் கொண்டது. குறிப்பாக வணிகத்தில், பெயர்ப் பலகையில் இருந்து கணினி மென்பொருள் வரை பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை இது கட்டாயப்படுத்துகிறது. கல்வி பிரெஞ்சு மொழி ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்பதையும் இச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. கனடாவின் பெரும்பான்மை மொழியான ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கான இத்தகைய கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.