பிருந்தா சோமயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருந்தா சோமயா
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம் இந்தியா
பிறப்பு28 சூன் 1949 (1949-06-28) (அகவை 74)
பாடசாலைசுமித் கல்லூரி,
மும்பை பல்கலைக்கழகம்
பணி

பிருந்தா சோமயா (Brinda Somaya; பிறப்பு 28 சூன் 1949) ஓர் இந்திய கட்டிடக் கலைஞரும் நகர்ப்புறத்திலிருக்கும் பழையக் கட்டிடங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவரும் ஆவார். [1]

பிருந்தா சோமயா 28 சூன் 1949 அன்று கே. எம். சின்னப்பா - கணவதி சின்னப்பா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [2] [3] பின்னர் இவர் மும்பையின் கதீட்ரல் & ஜான் கோனன் பள்ளியின் அறிவியல் திட்டத்தில் சேர்ந்தார். பிருந்தா அமெரிக்காவில் ( வட கரொலைனா ) படிக்க 1966இல் மதிப்புமிக்க அமெரிக்க புல சேவை சர்வதேச உதவித்தொகையை வென்றார். அதன்பிறகு, இவர் கட்டிடக்கலையில் ஈடுபட மிகவும் உத்வேகம் பெற்றார்.[2] 1967இல், இவர் இந்தியா திரும்பினார். மும்பையில் உள்ள சர் ஜேஜே கட்டிடக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1971இல் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா திரும்பத் முடிவெடுத்து மாசசூசெட்ஸின் நார்தாம்ப்டனில் உள்ள சுமித் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவர் 1973இல் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். இவர் 1972இல் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் ஒரு குறுகிய கால வடிவமைப்பு படிப்பில் கலந்து கொண்டார்.[2] [4]

தொழில்[தொகு]

பிருந்தா தனது கட்டிடக்கலை பயிற்சியை 1978இல் இந்தியாவின் மும்பையில் தொடங்கினார். இவரது நிறுவனத்தின் முதல் அலுவலகம் இவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் இருந்தது. ஒரு கட்டிடக் கலைஞரான தனது சகோதரியான ரஞ்சினி கலப்பாவுடன் 1978 முதல் 1981 வரை இவர் சேர்ந்து பணியாற்றினார். இவரது சகோதரி ஒல்லாந்துக்குப் போன பிறகு, இவர் சொந்தமாக வேலை செய்தார்.[4] இவர் இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு பயணம் செய்துள்ளார். அங்கிருந்து இவர் வட்டார கட்டிடக்கலைக்கான அறிவும் உத்வேகமும் பெற்றார். அத்தகைய ஒரு உதாரணம் வடோதராவிலுள்ள நாளந்தா சர்வதேச பள்ளிக் கட்டிமாகும். அங்கு இவர் உள்நாட்டில் கிடைக்கும் வளங்கள் மற்றும் நுட்பங்கள், பெர்கோலாஸ் மற்றும் முற்றத்தை பயன்படுத்தி நாட்டுப்புற கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறார். இவர் தனது கட்டிடக்கலையில் இந்திய நெறிமுறைகளை பிரதிபலிக்கிறார். இவரது வடிவமைப்புகள் பாரம்பரியமானவை எனவும் நிலையானவை எனவும் அழைக்கப்படுகின்றன.[4]

முக்கியப் பணிகள்[தொகு]

இவரது வேலைகளில் பெருநிறுவனங்கள், தொழில்துறைக் கட்டிடங்கள், நிறுவன வளாகங்கள் போன்றவை உள்ளன. மேலும், பொது இடங்கள் வரை விரிவடைகின்றன. அவை நடைபாதைகள், பூங்காக்கள், வணிக வளாகங்களாக புனரமைக்கப்பட்டன.[5] இந்த வளாகங்களில் சில டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், பான்யான் பார்க், மும்பை; நாளந்தா சர்வதேச பள்ளி, வடோதரா; சென்சார் தொழில்நுட்பங்கள், புனே ஆகியவை அடங்கும்.[6] அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் வரலாற்று லூயிசு கான் கட்டிடங்கள், மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கல்வி கட்டிடங்கள் ஆகியவற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான போட்டியில் இவரது நிறுவனம் வெற்றி பெற்றது. [7] [8]

இவர் தற்போது விசயவாடாவின் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார்.[9] மேலும், 40 வருட காலப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

1999 இல், பிருந்தா இந்தியாவில் HECAR அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலராக இருந்தார். 2000ஆம் ஆண்டில், இந்தியா, வங்காளதேசம் , இலங்கை, ஆத்திரேலியா, பாக்கித்தானைச் சேர்ந்த பெண் கட்டிடக் கலைஞர்களுக்கான உலகளாவிய காட்சித் தளமான தெற்காசிய பெண்கள் கட்டிடக் கலைஞர்களின் படைப்புகள் குறித்த கண்காட்சியில் மகளிர் தலைவராகவும், கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.[10][2]

திருமணம்[தொகு]

பிருந்தா சோமயா இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் சோமயாவை மணந்தார்.[2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brinda, Somaya. "Ar. Brinda Chinnappa Somaya, Somaya and Kalappa Consultants". Modern Green Structures and Architecture. NBM Media. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Somaya, Brinda (2018). Brinda Somaya : works & continuities : an architectural monograph. Parikh, Ruturaj,, Sampat, Nandini Somaya,, Hecar Foundation,, Somaya and Kalappa Consultants Pvt. Ltd.. Ahmedabad, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789385360237. இணையக் கணினி நூலக மையம்:1030040587. 
  3. Woman's Eye, Woman's Hand: Making Art and Architecture in Modern India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789383074785. 
  4. 4.0 4.1 4.2 4.3 Desai, Madhavi, 1951- author.. Women architects and modernism in India: narratives and contemporary practices. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780367177430. இணையக் கணினி நூலக மையம்:1099865120. 
  5. "Building Storeys: An Architect's journey through the Indian landscape • The Lakshmi Mittal and Family South Asia Institute". The Lakshmi Mittal and Family South Asia Institute (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
  6. "Three Campuses and Brinda: Inside Outside Magazine". 2015-07-13. Archived from the original on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
  7. "IIMA appoints consultant to restore historic Louis Kahn - timesofindia-economictimes". 2016-03-05. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
  8. Somaya, Brinda. "Empanelment for architects for comprehensive architectural consultancy for upcoming Academic and Residential projects for IIT-B" (PDF). Archived from the original (PDF) on 2015-04-21.
  9. gluelagoon.com, Glue Lagoon Interactive-. "Somaya & Kalappa Consultants - Architecture, Interiors, Planning, Conservation And Urban Design". www.snkindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  10. "The HECAR Foundation unveils Women In Design 2020+". Realty Plus Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருந்தா_சோமயா&oldid=3712574" இலிருந்து மீள்விக்கப்பட்டது