பிரீத் பராரா
பிரீத் பராரா Preet Bharara | |
---|---|
நியூயார்க் தெற்கு மாவட்ட அரச வழக்கறிஞர் | |
பதவியில் 13 ஆகத்து 2009 – 11 மார்ச் 2017 | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா டோனால்ட் டிரம்ப் |
முன்னையவர் | லேவ் தாசின் (பதில்) |
பின்னவர் | சூன் எச். கிம் (பதில்)[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 13, 1968 ஃபிரோஸ்பூர், பஞாப், இந்தியா |
வாழிடம்(s) | நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
முன்னாள் கல்லூரி | ஹார்வர்டு பல்கலைக்கழகம் கொலம்பியா சட்டப் பள்ளி |
கையெழுத்து | |
பிரீத் பராரா (Preetinder Singh "Preet" Bharara, பிறப்பு: அக்டோபர் 13 1968) அமெரிக்க வழக்கறிஞர். 2009 முதல் 2017 வரை நியூயார்க்கு தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞராகப் பணி புரிந்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். பொது வாழ்வில் நிலவும் ஊழல், வால் ஸ்ட்ரீட் குற்றங்கள் போன்ற தீமைகளை எதிர்த்து வெளிப்படையாகச் செயல்பட்டவர்.[2][3][4] அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் பராக் ஒபாமா இவரை அரசு வழக்கறிஞராக அமர்த்தினார்.[5]
பிறப்பும் படிப்பும்
[தொகு]சீக்கியத் தந்தைக்கும் இந்து தாய்க்கும் பஞ்சாப் மாநில பிரோஸ்புர் என்னும் ஊரில் பிறந்தார். 1970 இல் இவருடைய பெற்றோர் அமெரிக்காவில் குடியேறினார்கள். நியூ செர்சியில் வளர்ந்த பிரீத் பராரா ஆர்வர்டு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா சட்டப் பள்ளியில் படித்து வழக்கறிஞர் பட்டமும் பெற்றார்.
நீதித்துறைப் பணிகள்
[தொகு]நியுயார்க்கு தென் மாவட்டத்திற்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் பொறுப்பை 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுக் கொண்டார். ஆயுதக்கடத்தல், கஞ்சா கடத்தல், பயங்கரவாதச் செயல்கள் ஆகியவற்றைத் தடுக்கவும் கண்டு ஆராயவும் 25 நாடுகளுக்கு அதிகாரிகளை அனுப்ப உத்தரவிட்டார்.
பங்குச் சந்தைகளில் சட்டத்திற்கு முரணாக உள் வணிகத்தைத் தடுத்து நிறுத்த குற்றம் இழைப்போரைத் தண்டித்தார். சிட்டி பாங்கு, அமெரிக்கன் பாங்கு ஆகியவற்றின் முறையற்ற செயல்களுக்கு விசாரணை நடத்தித் தண்டனைகள் வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் செய்த ஊழல் வழக்குகள் மீது உசாவல் நடத்தி உரிய தண்டனை வழங்கினார்.
இந்தியத் தூதர் தேவயானி கோபர்கடே சம்பவம் நடந்தபோது சட்டப்படி பிரீத் பராரா நடந்துகொண்டார்.[6] மேட் ஆப் போன்சி மற்றும் ஜேபி மார்கண் சேஸ் ஆகிய வழக்குகளும் இவர் காலத்தில் ஏற்பட்டன.
பதவிப் பறிப்பு
[தொகு]அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பதவிகளுக்குப் புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வந்தார். இந்நிலையில், பராரா உட்பட முந்தைய அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட 46 அரசு வழக்கறிஞர்களை உடனடியாகப் பதவி விலக துணை சட்டமா அதிபர் உத்தரவிட்டார். இதற்குப் பராரா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பராராவின் பதவி பறிக்கப்பட்டது. அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பதவிகளுக்குப் புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வந்தார். ஆனாலும், பராரா தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கலாம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statement By U.S. Attorney Preet Bharara". 11 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 11-03-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Michelle Celarier and Josh Saul (5-10-2015). "Supreme Court derails Bharara’s Wall St. crusade". New York Post. http://nypost.com/2015/10/05/supreme-court-rejects-insider-trading-case-in-setback-for-bharara/. பார்த்த நாள்: 25-12-2015.
- ↑ Kenneth Lovett (9-11-2015). "Lovett: Preet Bharara’s legacy is on the line in Sheldon Silver and Dean Skelos cases". New York Daily News. http://www.nydailynews.com/news/politics/lovett-bharara-legacy-line-silver-skelos-cases-article-1.2427638. பார்த்த நாள்: 25-12-2015.
- ↑ Benjamin Weiser & William K. Rashbaum, With Preet Bharara’s Dismissal, Storied Office Loses Its Top Fighter, New York Times (10-03-2017).
- ↑ George, Varghese K. "Who is Preet Bharara?". தி இந்து.
- ↑ Chaudhury, Dipanjan Roy (13 மார்ச் 2017). "Fired US prosecutor Bharara had build case against diplomat Khobragade". The Economic Times.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Preet Bharara tells Trump he will stay on as NY prosecutor". 1-12-2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)