பிரீத்தி சாகர்
| பிரீத்தி சாகர் | |
|---|---|
பிரீத்தி சாகர் 2012-இல் | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | இந்தியா |
| இசை வடிவங்கள் | Pop, இந்தியப் பாரம்பரிய இசை |
| தொழில்(கள்) | பாடகர், பின்னணிப் பாடகர் |
| இசைத்துறையில் | 1969–முதல் |
பிரீத்தி சாகர் (Preeti Sagar) என்பவர் ஒரு முன்னாள் பாலிவுட் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 1978-ஆம் ஆண்டு மந்தன் திரைப்படத்தில் "மேரோ காம் கதா பரே" பாடலுக்காகவும், ஜூலி (1975) திரைப்படத்தில் "மை ஹார்ட் இஸ் பீட்டிங்" என்ற வெற்றிப் பாடலுக்காகவும் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[1]
தொழில்
[தொகு]பிரீத்தி இசை, பாடலில் அடிப்படை பாரம்பரிய அறிவைக் கொண்ட ஒரு திறமையான பாடகி. சியாம் பெனகல் விளம்பரங்களுக்கு ஜிங்கிள்களைப் பாடும்படி கேட்டபோது அவர் தனது பாடகி வாழ்க்கையைத் தொடங்கினார்.[2]
ஜூலி படத்தில் மை ஹார்ட் இஸ் பீட்டிங் என்ற ஆங்கிலப் பாடலின் மூலம் இவர் புகழ் பெற்றார். இதற்காக இவர் ஒரு சிறப்பு பிலிம்பேர் விருதை வென்றார்.
குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் கல்வித் துறையிலும் இவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் நன்கு அறியப்பட்டவர். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல குழந்தைகளுக்கான மழலை பாடல் தொகுப்புகளின் ஒலிப் பதிப்புகளை உருவாக்க இவர் சரிமாவுடன் இணைந்து பணியாற்றினார். இவர் ஒரு தேவதைக் கதைகள் தொடரையும் உருவாக்கினார்.
இவர் இப்போது ஏஞ்சலா பிலிம்ஸ் என்ற தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது விளம்பரம், குறும்படங்கள், திரைப்படப் பின்னணிப் பணிகளைச் செய்கிறது. 1990களில், ஏஞ்சலா பிலிம்ஸ், புல்வாரி பச்சோன் கி என்ற குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரித்தது. இவர் 52வது தேசியத் திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்தார்.[3]
2010-இல், இவர் ஆதார் அடையாள அட்டைதிட்டத்தின் அதிகாரப்பூர்வக் கருப்பொருள் பாடலான யே ஹை மேரி பெஹ்சானைப் பாடினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பிரீத்தி சாகர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் மும்பையில் வசிக்கிறார். இவரின் தந்தை, நடிகர் மோதி சாகர், நடிகர் மோதிலால் மற்றும் பாடகர் முகேசின் உறவினர். 1950கள் மற்றும் 60களில் அப்னா கர், பர்மா ரோடு மற்றும் சோட்டி சோட்டி பாடின் போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரீத்திக்கு "மேரோ காம் கதா பரே" பாடலை எழுதிய நீதி மற்றும் அவரின் தந்தை தயாரித்த புல்வாரி பச்சோன் கி (1992-1999) பாடலைத் தொகுத்து வழங்கிய நமிதா சாகர் ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[4][5]
பிரபலமான பாடல்கள்
[தொகு]- ஜூலி (1975) – மை கார்ட் இஸ் பீட்டிங்
- நிசாந்த் (1975) – பியா பாஜ் பியாலா பியா ஜாயே நா
- மந்தன் (1976) – மேரோ காம் கத்யவாடே
- பூமிகா (1977) – தும்ஹாரே பின் ஜீ நா லாகே
- கலியுக் (1981) – வாட் இஸ் யுவர் பிராபலம்
- மண்டி (1983) – ஷம்ஷேர் பராஹ்னா மாங் கசாப்
- லாக்கெட் (1986) - ஜோ பி கெஹ்னா சச் ஹை கெஹ்னா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Awards". IMDb.
- ↑ "Preeti Sagar: Shyam Benegal Was a True Visionary - Exclusive". Filmfare. 24 December 2024. https://www.filmfare.com/interviews/preeti-sagar-shyam-benegal-was-a-true-visionary-exclusive-70446.html.
- ↑ "Juries for the selection of films for National Awards set up". Ministry of Information & Broadcasting. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=9928.
- ↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Moti Sagar
- ↑ "Mumbai Notes: Thespian Moti Sagar dead". http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990315/ige15081.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரீத்தி சாகர்
- Preeti Sagar at last.fm
- Angela Films Company official website