பிரீட்ரிக் நீட்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரீட்றிக் நியட்சே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரீட்ரிக் நீட்சே
மேல்நாட்டு மெய்யியல்
19ஆம் நூற்றாண்டு மெய்யியல்
Nietzsche187a.jpg
முழுப் பெயர் பிரீட்ரிக் நீட்சே
பிறப்பு அக்டோபர் 15, 1844
(Röcken bei Lützen, பிரஷ்யா)
இறப்பு ஆகத்து 25, 1900(1900-08-25) (அகவை 55)
(வீமார், ஜெர்மன் பேரரசு)
சிந்தனை
மரபு(கள்)
Weimar Classicism; precursor to Continental philosophy, இருப்பியல்வாதம், பின்நவீனத்துவம், பின்னமைப்பியல்வாதம், உளப்பகுப்பாய்வு
முக்கிய
ஆர்வங்கள்
அழகியல், நெறிமுறை, ontology, வரலாற்று மெய்யியல், உளவியல், விழுமியக் கோட்பாடு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Apollonian and Dionysian, இறைவனின் இறப்பு, eternal recurrence, herd-instinct, ஆண்டான்-அடிமை ஒழுக்கநெறி, Übermensch, perspectivism, will to power, ressentiment
கையொப்பம் Friedrich Nietzsche Signature.svg

பிரீட்ரிக் நீட்சே அல்லது நீட்சே எனச் சுருக்கமாக அறியப்படும் பிரீட்ரிக் வில்ஹெல்ம் நீட்சே (Friedrich Wilhelm Nietzsche - அக்டோபர் 15, 1844 – ஆகஸ்ட் 25, 1900) 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெர்மானிய மெய்யியலாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் மதம், ஒழுக்கநெறி, சமகாலப் பண்பாடு, மெய்யியல், அறிவியல் ஆகியவை தொடர்பில் பல முக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஒரு தனித்துவமான ஜெர்மன் மொழிப் பாணியில் அமைந்திருந்தன. நீட்சேயின் செல்வாக்கு மெய்யியலுக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது. சிறப்பாக இருப்பியல்வாதம், பின்நவீனத்துவம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவரது பாணியும்; உண்மை தொடர்பான விழுமியம், புறநிலைநோக்கு என்பவை குறித்த அவரது கேள்விகளும்; அவற்றை விளக்குவது தொடர்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் அக்காலத்து ஐரோப்பிய மெய்யியலிலும், பகுப்பாய்வு மெய்யியல் துறையிலும் பல துணை நூல்கள் உருவாகின.

பேரிடர்களை வாழ்வின் உறுதிப்பாட்டு நிகழ்வுகளாக விளக்குதல்; மீள்நிகழ்வின் நிலைபேறு (eternal recurrence); பிளேட்டோனிசத்துக்கான மறுப்பு; கிறிஸ்தவம், சமநோக்குவாதம் (Egalitarianism) என்பவற்றை மறுத்தல் என்பவை இவருடைய முக்கியமான எண்ணக்கருக்கள்.

மெய்யியலுக்கு வருவதற்குமுன் இவர் ஒரு மொழியியலாளராகப் பணியைத் தொடங்கினார். இவருக்கு 24 வயதாக இருக்கும்போது, பேசல் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஆனால், 1879 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவினால் இப்பதவியில் இருந்து அவர் விலகினார். 1889 ஆம் ஆண்டில் இவருக்குத் தீவிரமான மனநோயின் அறிகுறிகள் தென்பட்டன. இதனால், 1900 ஆவது ஆண்டில் அவர் இறக்கும்வரை, தனது தாயினதும், சகோதரியினதும் பாதுகாப்பில் இருக்கவேண்டி ஏற்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Friedrich Nietzsche

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீட்ரிக்_நீட்சே&oldid=2432236" இருந்து மீள்விக்கப்பட்டது