பிரீடம் 251

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரீடம் 251
Freedom251image.jpg
பிரீடம் 251
தயாரிப்பாளர்இரிங்கிங்கு பெல்சு தனியார் வரையறுக்கப்பட்டது
இந்தியா
இயங்கு தளம்ஆண்டிராயுடு 5.1 இலாலிப்பாப்பு[1]
உள்ளீடுதொடுதிரை, நெருங்கமையுணரி[2]
CPU1.3 GHz நாற்கரு முறைவழியாக்கி[3]
நினைவகம்GB[4]
நினைவக அட்டை32 GB வரையிலான நுண்ணிலக்கப்பாதுகாப்பு அட்டை[5]
பதிவகம்GB[6]
பிணையங்கள்இரண்டாந் தலைமுறை, மூன்றாந் தலைமுறை[7]
தொடர்பாற்றல்ஒய்-பை, புளூட்டூத்து
மின்கலன்1450 mAh
அளவு960x540 படவணுக்கள்[8]
தொடர்பிரீடம் தொடர்
பிறபண்பலை[2]

பிரீடம் 251 (Freedom 251) என்பது, அதன் அறிமுகத்தின்போது, உலகிலேயே விலைகுறைந்த நுண்ணறிபேசி என விளம்பரப்படுத்தப்பட்ட ஓர் ஆண்டிராயுட்டு நுண்ணறிபேசி ஆகும்.[9] இதனை நொயுடாவிலுள்ள இரிங்கிங்கு பெல்சு நிறுவனம் உருவாக்கியுள்ளது.[10]

பிரீடம் 251இற்கான முன்பதிவுகள் பெபிரவரி 18, 2016 அன்றிலிருந்து வழங்கத்தொடங்கப்பட்டன.[11] நொடிக்கு 600000 வரையிலான பார்வைகளைப் பெற்றதால் இந்நாளிலேயே பிரீடம் 251ஐ முன்பதிவு செய்வதற்கான வலைத்தளத்தை அணுகமுடியாத நிலை ஏற்பட்டது.[12] மொத்தமாக, 17.5 மில்லியன் உரூபாய்க்கு முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.[13]

சச்சரவு[தொகு]

பிரீடம் 251இன் வலைத்தளத்தில் அரைவாசி (0.5) நுண்ணறிபேசியை முன்பதிவு செய்யக்கூடியதாக இருந்தது இதன் நம்பகத்தன்மை குறித்த ஐயத்தை எழுப்பியிருந்தது.[14] அட்கொம் ஐக்கான் 4 என்ற சீன நுண்ணறிபேசியே புதிய பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சச்சரவு எழுந்துள்ளது.[15]

பிரீடம் 251 தொடர்பில் எழுந்த சச்சரவுகளையடுத்து, இரிங்கிங்கு பெல்சு நிறுவனமானது முதல் 30000 வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பியளித்து, நுண்ணறிபேசியைப் பெற்றபின் பணத்தை வழங்கும்படி அறிவித்தது.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. பிடிஐ (2016 பெப்ரவரி 18). "ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிமுகம்". தி இந்து. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 2. 2.0 2.1 "Ringing Bells Freedom 251". NDTV. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 3. "ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்". தினத்தந்தி (2016 பெப்ரவரி 18). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 4. "ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் மவுசு; நொடிக்கு 6லட்சம் பேர் முன்பதிவு - முடங்கியது இணையதளம்". தினமலர் வர்த்தகம். பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 5. "இந்தியாவில் வெறும் ரூ.251க்கு ஸ்மார்ட்போன்: அசத்தலான 7 அம்சங்கள்!". நாணயம் விகடன் (2016 பெப்ரவரி 17). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 6. "ஒரு வினாடிக்கு 6 லட்சம் பேர் வருகையால் முடங்கியது ப்ரீடம் 251 இணையதளம் - முன்பதிவு 24 மணிநேரம் நிறுத்தம்". மாலை மலர். பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 7. Shruti Dhapola (2016 பெப்ரவரி 18). "Ringing Bells Freedom 251, priced at Rs 251 launched: Here’s how to buy". The Indian Express. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 8. Ritu Singh (2016 பெப்ரவரி 17). "‘Freedom 251’ To Cost Just Rs 251. Here’s All You Need To Know About World’s Cheapest Smartphone". ScoopWhoop. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 9. "Freedom 251: 10 things we know about world’s cheapest smartphone". Hindustan Times (2016 பெப்ரவரி 17). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 10. "மலிவு விலை ஸ்மார்ட்போன்: மக்களிடம் மவுசு...சங்கங்கள் எதிர்ப்பு". தினமலர் (2016 பெப்ரவரி 18). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 11. "Freedom 251 website crashes, company says will be back in 24 hours". Times of India (2016 பெப்ரவரி 18). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 12. "Rs. 251 Smartphone Bookings Stopped as Company Servers are 'Overloaded'". NDTV (2016 பெப்ரவரி 18). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 13. "Ringing Bells now accepting cash on delivery for Freedom 251". The Indian Express (2016 பெப்ரவரி 29). பார்த்த நாள் 2016 மே 12.
 14. Kunal Anand (2016 பெப்ரவரி 18). "Here's Why The Freedom 251 Might Be The Scammiest Scam Of 2016". Indiatimes. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 15. Naina Khedekar (2016 பெப்ரவரி 18). "Freedom 251 bookings paused, will resume within 24 hours". Firstpost. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 18.
 16. "Freedom 251 Maker Reportedly Refunds First 30,000 Customers". NDTV (2016 பெப்ரவரி 28). பார்த்த நாள் 2016 மே 12.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீடம்_251&oldid=2085852" இருந்து மீள்விக்கப்பட்டது