பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய-[பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்
1947-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பன்னுவிலிருந்து, இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், தொடருந்து மூலம் இந்தியாவிற்கு புலம்பெயரும் காட்சி
அதிகாரப்பூர்வ பெயர்ஆங்கிலம்: Partition Horrors Remembrance Day
இந்தி: विभाजन विभीषिका स्मृति दिवस
கடைபிடிப்போர் இந்தியா
முக்கியத்துவம்இந்தியப் பிரிவினையின் போது புலம்பெயர்ந்த மக்கள் அடைந்த கொடுமைகளையும், செய்த தியாகங்களையும், உயிர் நீத்தவர்களையும் நினைவு கூறும் நாள்[1]
நாள்14 ஆகஸ்டு
நிகழ்வுஆண்டு தோறும்
முதல் முறை14 ஆகத்து 2021 (2 ஆண்டுகள் முன்னர்) (2021-08-14)
மூலம் தொடங்கப்பட்டதுஇந்திய அரசு
தொடர்புடையனஇந்தியப் பிரிவினை

பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் என்பது இந்தியாவில் ஆகத்து 14 அன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு தேசிய நினைவு நாளாகும். இதனை 2021 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் அறிவித்தார்.[2] இந்தியப் பிரிவினையின் போது பல இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்த போது, பல கொடுமைகள் அனுபவித்து, உயிர் இழந்த மக்களுக்காக நினைவுகூறும் நாளாகும்.[3] இந்தியப் பிரிவினையின் போது, பிரிக்கப்பட்ட பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்தனர். மேலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியர்களுக்கு நினைவூட்டுவதை பிரிவினை கொடுமைகள் நினவு நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.[4][5]

இந்தியப் பிரிவினையால் 10 முதல் 20 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் 2 இலட்சம் முதல் 2 மில்லியன் மக்கள் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை 200,000 முதல் 2 மில்லியன் வரையிலான புள்ளிவிவரங்களுடன் சர்ச்சைக்குரியதாக உள்ளது.[6][a]
[7][8][9][10][b]

பிரிவினை கொடுமைகள் என்பது பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளில் நடைபெற்றது. ஆகஸ்டு, 1947 ஆம் ஆண்டு இந்தியப்பிரிவினையின் போது இந்தியர்கள் அடைந்த துன்பங்கள் மற்றும் தியாகங்களை தேசத்திற்கு நினைவூட்டுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு 14-ஆம் நாள் பிரிவினை கொடுமைகள் நினைவு நாளாக நினைவுகூரப்படும் என்று 14 ஆகஸ்ட் 2021 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

14 ஆகஸ்டு 2021 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, "பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. இலட்சக்கணக்கான நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் மனமில்லாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர். நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை கொடுமை நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படும். பிரிவினை திகில் நினைவு நாள் சமூக பிளவுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றின் நஞ்சை அகற்றி ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டும்."[11]

2022 ஆம் ஆண்டில், "லாகூர் மற்றும் அமிர்தசரஸில் உள்ள இடிந்த கட்டிடங்களின் பதாகைகள் அடங்கிய ஒரு கண்காட்சியை தில்லி மெட்ரோவில் அமைத்து பிரிவினை திகில் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.[11]

குறிப்புகள்[தொகு]

  1. "The death toll remains disputed with figures ranging from 200,000 to 2 million."[6]
  2. "Some 12 million people were displaced in the divided province of Punjab alone, and up to 20 million in the subcontinent as a whole."[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'In Memory of Sacrifices & Struggles': PM Modi Marks August 14 as Partition Horrors Remembrance Day". News18. 14 August 2021.
  2. "Narendra Modi picks August 14 to recall Partition trauma". The Hindu. 14 August 2021. https://www.thehindu.com/news/national/partition-horrors-remembrance-day-narendra-modi-picks-august-14-to-recall-partition-trauma/article35907824.ece. பார்த்த நாள்: 14 August 2022. 
  3. "August 14 to be observed as Partition Horrors Remembrance Day: PM Modi | India News - Times of India". The Times of India.
  4. "14 August will be observed as Partition Horrors Remembrance Day: PM Modi". mint. 14 August 2021.
  5. "'In Memory of Sacrifices & Struggles': PM Modi Marks August 14 as Partition Horrors Remembrance Day" (in en). News18. 14 August 2021. https://www.news18.com/news/india/partition-horrors-remembrance-day-how-indians-will-recall-august-14-says-pm-modi-4083782.html. 
  6. 6.0 6.1 Talbot & Singh 2009, ப. 2.
  7. Population Redistribution and Development in South Asia. Springer Science & Business Media. 2012. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9400953093. https://books.google.com/books?id=tGiSBAAAQBAJ&pg=PA6. 
  8. "Rupture in South Asia" (PDF). United Nations High Commission for Refugees. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
  9. Dr Crispin Bates (3 March 2011). "The Hidden Story of Partition and its Legacies". BBC. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
  10. 10.0 10.1 Vazira Fazila‐Yacoobali Zamindar (4 February 2013). India–Pakistan Partition 1947 and forced migration. doi:10.1002/9781444351071.wbeghm285. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781444334890. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/9781444351071.wbeghm285. பார்த்த நாள்: 16 January 2021. 
  11. "Newspaper clippings, maps and images from Partition: Exhibition now open at Rajiv Chowk and Kashmere Gate metro stations". இந்தியன் எக்சுபிரசு (in Indian English). 11 August 2022.