உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியா லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியா லால்
பிறப்புபிரியங்கா லாலாஜி
1 ஆகத்து,
லிவர்பூல், மேர்சேசைடு
தேசியம்இங்கிலாந்து
மற்ற பெயர்கள்பிரியா
பணிநடிகை
விளையாட்டு தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010–முதல்

பிரியா லால் (Priyaa Lal) என்று அழைக்கப்படும் பிரியங்கா லாலாஜி ஒரு இங்கிலாந்து நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 2010ஆம் ஆண்டு என். ஆர். சஞ்சீவ் இயக்கிய மோகன்லால், சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான ஜனகன் என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பிரியா லால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ரஸ் அல்-கைமா நகரில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் லாலாஜி மற்றும் பீனா கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவருக்கு ஒரு அண்ணன் தீபக் லாலாஜி உள்ளார். பிரியா இளம் குழந்தையாக இருந்தபோது, இவரது குடும்பம் ஐக்கிய இராச்சியத்தின், இங்கிலாந்தின் லிவர்பூலுக்கு குடிபெயர்ந்தது.

தொழில்

[தொகு]

பிரியா 2011-ஆம் ஆண்டு ஜனகன் திரைப்படத்தில் அறிமுகமானார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பின்னர் இவர் மலையாளத் திரையுலகில் கில்லாடி ராமன் (2011) மற்றும் லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி (2015) உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்தார்.[3]

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2010 ஜனகன் சீதா/அனு மலையாளம் அறிமுகத் திரைப்படம்
2011 கில்லாடி ராமன் ராதிகா மலையாளம்
2015 லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி மீன்கன்னி மலையாளம்
2018 ஜீனியசு மல்லிகை தமிழ்
2019 லாட்சு ஆப் லவ் நாகலட்சுமி (தெலுங்கு)
<அரிணி (தமிழ்)
தெலுங்கு &
தமிழ்
எம். எக்சு. பிளேயருக்கான வலைத் தொடர்
2020 குவ்வா கோரின்கா சிரிசா தெலுங்கு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது
2023 ஜென்டில்மேன் 2 தெரியவில்லை தமிழ் அறிவிக்கப்பட்டது

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு பங்கு சேனல்
2016 சூப்பர் நைட் 2 நகைச்சுவை தொகுப்பாளர் பிளவர்சு தொலைக்காட்சி
2019 சாம்பியன்ஸ் படகு லீக் விளையாட்டு தொகுப்பாளர் இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா
2019-2020 இந்தியன் சூப்பர் லீக் விளையாட்டு தொகுப்பாளர் இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_லால்&oldid=4391236" இலிருந்து மீள்விக்கப்பட்டது