பிரியா தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரியா தத்
Priya Dutt.jpg
2011இல் பிரியா
வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 - 2014
முன்னவர் ஏக்நாத் கெயிக்வாட்
பின்வந்தவர் பூனம் மகாஜன்
வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2005 - 2009
முன்னவர் சுனில் தத்
பின்வந்தவர் குருதாஸ் காமத்
தனிநபர் தகவல்
பிறப்பு 28 ஆகத்து 1966 (1966-08-28) (அகவை 55)
மும்பை, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்)
ஓவன் ரான்கான் (தி. 2003)
பிள்ளைகள் 2[1]
பெற்றோர் சுனில் தத் (தந்தை)
நர்கிசு (தாயார்)
இருப்பிடம் பாலி ஹில், பாந்த்ரா, மும்பை
பணி சமூகப்பணி
அரசியல்வாதி[1]

பிரியா தத் ரோன்கான் ( Priya Dutt Roncon ) (பிறப்பு 28 ஆகஸ்ட் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகருமாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 22 நவம்பர் 2005 அன்று மகாராட்டிராவின் மும்பை வடமேற்கு தொகுதியிலிருந்து பதினான்காவது மக்களவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2009 முதல் பதினைந்தாவது மக்களவையில் வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2014 , 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில், இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பூனம் மகாஜனால் தோற்கடிக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான சுனில் தத் - நர்கிசின் மகளாவார். இவர் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர்.[2] [3] இவருடைய பெற்றோர் இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இவரது தந்தை காங்கிரசு அரசில் அமைச்சராக இருந்தார். இவர் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நம்ரதா தத்தின் சகோதரியாவார்.[4] இவரது சகோதரியுடன் சேர்ந்து, 2007 ஆம் ஆண்டில், "திரு மற்றும் திருமதி தத்: எங்கள் பெற்றோரின் நினைவுகள்" என்ற நினைவுக் குறிப்பை வெளியிட்டார்.[5]

மும்பை பல்கலைக்கழகத்தின் சோபியா கல்லூரியில் (அப்பொழுது பம்பாய் பல்கலைக்கழகம்) சமூகவியலில் இளங்கலை பெற்ற இவர் அமெரிக்காவின் நியூயார்க்கு நகரத்தில் உள்ள ஊடகக் கலை மையத்திலிருந்து தொலைக்காட்சித் தயாரிப்பில் முதுகலை பட்டயப்படிப்பைப் பெற்றுள்ளார்.

அரசியல்[தொகு]

2005ஆம் ஆண்டில், தனது தந்தை சுனில் தத்தின் மரணத்தைத் தொடர்ந்து, குறைந்த வாக்களிப்பு இருந்தபோதிலும், இவர் மக்களவைக்கு சிவ சேனா கட்சி வேட்பாளரை விட 1,72,043 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்காக இவர் கணிசமான ஊடக கவனத்தைப் பெற்றார். ஓரளவு இவரது புகழ்பெற்ற குடும்பத்தின் காரணமாகவும் இருக்கலாம்.[6] தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பிரியா அகில இந்திய காங்கிரசு கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

பல்கலைக்கழகப் படிப்பிற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சியில் காணொலிகளிலும் பணியாற்றினார். நியூயார்க்கில் உள்ள ஊடகக் கலை மையத்தில் படித்தார்.[7] மும்பை கலவரத்தின் போதும் அதற்குப் பிறகும், மும்பையில் முஸ்லிம் அகதிகளுடன் பணியாற்றினார். இதற்காக தொலைபேசி அச்சுறுத்தல்களையும் பொதுவெளியில் தொல்லைகளையும் பெற்றார். [8]

1981இல் புற்றுநோயால் இறந்த தனது தாயார் நர்கிசு தத்தின் நினைவாக, தனது தந்தை சுனில் தத் தொடங்கிய நர்கிஸ் தத் நினைவு அறக்கட்டளையையும் இவர் நிர்வகித்து வருகிரார்.[9]

சொந்த வாழ்க்கை[தொகு]

பிரியா, மும்பையின் பாந்த்ராவைச் சேர்ந்த உரோமன் கத்தோலிக்கர் இசை விளம்பர நிறுவனத்தில் பங்குதாரரான ஓவன் ரான்கோன் என்பவரை 27 நவம்பர் 2003 இல் மணந்தார்.[10][11] இவர்களுக்கு சுமீர் (பிறப்பு 2007) சித்தார்த் (பிறப்பு 2005) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[12]

நூலியல்[தொகு]

  • Mr and Mrs Dutt: Memories of our Parents, Namrata Dutt Kumar and Priya Dutt, 2007, Roli Books. ISBN 978-81-7436-455-5.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரியா தத்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_தத்&oldid=3221307" இருந்து மீள்விக்கப்பட்டது