பிரியா ஜிங்கன்
படைத்துறைப் பணித்தலைவர் பிரியா ஜிங்கன் | |
---|---|
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 10 |
தரம் | படைத்துறைப் பணித்தலைவர் |
பிரியா ஜிங்கன் (Priya Jhingan) ஓர் இந்திய இராணுவ அதிகாரியும், 1993 இல் இந்திய இராணுவத்தில் பெண்கள் பிரிவு எண் 1இல் நியமிக்கப்பட்டு முதல் பெண்கள் குழுவில் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற 25 பெண் அதிகாரிகளில் ஒருவராவார்.[1][2][3][4][5]
இராணுவ வாழ்க்கை
[தொகு]ஒரு காவல் துறை அதிகாரியின் மகளாக இருந்த பிரியா, முதலில் இந்தியக் காவல் பணியில் சேர விரும்பினார். ஆனால் பின்னர், இராணுவத்தில் சேர தன்னை அனுமதிக்குமாறு அப்போதைய இராணுவத் தலைமை தளபதி சுனித் பிரான்சிசு ரோட்ரிக்சுக்கு கடிதம் முடிவு செய்தார்.[1] இவரது கோரிக்கை 1992 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சி கழகத்தில் பயிற்சி பெறுவதற்காக சென்னை அனுப்பப்பட்டார். இவர் 21 செப்டம்பர் 1992 முதல் 24 பெண் பயிற்சியாளர்களுடன் தனது இராணுவப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் 06 மார்ச் 1993 அன்று முதல் மகளிர் பயிற்சிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1][3] பின்னர், காலாட்படையில் சேருவதற்கான இவரது கோரிக்கை இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சட்டப் பட்டதாரி என்பதால், இவர் வழக்கறிஞர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டார் .[1] அந்த துறையில் பத்து வருட சிறப்பான சேவைக்குப் பிறகு, இவர் ஏராளமான அணி வகுப்பை நடத்தினார். பின்னர், 2003 இல் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி படைத்துறைப் பணித்தலைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[1] இவர், இந்திய இராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சமமான பாத்திரங்களை வழங்குவதற்கான வலுவானவராக இருந்து வருகிறார். இளையரையர் சுஷ்மிதா சக்ரவர்த்தியின் சர்ச்சைக்குரிய தற்கொலையில் இந்திய இராணுவத்தில் உள்ள பெண்களுக்காக இவர் வாதாடினார். இதில் இராணுவத்தின் துணைத் தலைவர் இளையரையர் எஸ். பட்டாபிராமன் இராணுவத்தில் பெண்களை பற்றிக் கூறிய உணர்ச்சியற்ற கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது.[6] இந்திய இராணுவத்தில் இருந்து வெளியேறிய பிறகு, இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு பிரிவுகளின் கட்டளையை வழங்கினார். இவரது கருத்துக்கள் 17 பிப்ரவரி 2020 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 17 வருடங்களுக்குப் பிறகு, 2020 பிப்ரவரியில் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு கட்டளையிடுவதற்கு சம வாய்ப்புகளை வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகான வாழ்க்கை
[தொகு]இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் அரியானா நீதித்துறை சேவைகளை முடித்தார். ஆனால் நீதித்துறையில் சேர விரும்பவில்லை. பொதுமக்கள் தகவல்தொடர்பில் இளங்கலை பட்டம் முடித்தார். 'சிக்கிம் எக்ஸ்பிரஸ் என்ற வார இதழை கேங்டாக்கிலிருந்து வெளியிட்டார். 2013 ஆம் ஆண்டில், கத்ரோன் கே கில்லாடி பருவம் 1 என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் தோன்றினார்.[7] 2013இல் சனாவரிலுள்ள லாரன்ஸ் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும்[8] விடுதிக் காப்பாளராகவும் சேர்ந்தார்.[9] பிரியா "பெப் டர்ஃப் " என்ற சாகச விளையாட்டு நிறுவனத்தை நடத்தும் கர்னல் மனோஜ் மல்கோத்ராவை மணந்தார். இந்த தம்பதியினர் இந்தியாவின் சண்டிகரில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆர்யமன் என்ற ஒரு மகன் உள்ளார்.[6][10] ஆகஸ்ட் 2020 இல், இவர் ஏழு பெண் மாணவிகளுடனும், லாரன்ஸ் பள்ளியின் ஒரு பெண் ஆசிரியருடனும் சேர்ந்து ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த கிளிமஞ்சாரோ மலையில் ஏறினார். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும்.[11]
பிப்ரவரி 2018 இல், பிரியா ஜிங்கன், இந்தியாவின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 112 முக்கியப் பெண்களுடன் இந்திய இராணுவத்தில் முன்னோடியாக இருந்ததற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Priya Jhingan army's first woman officer". archive.indianexpress.com. Retrieved 2017-07-17.
- ↑ "List of 'First' Indian women in Indian history". indiatoday.intoday.in. Archived from the original on 2017-12-23. Retrieved 2017-07-17.
- ↑ 3.0 3.1 Dr. Saroj Kumar Singh (2017). Role of Women in India. REDSHINE. ISBN 978-93-86483-09-6.
- ↑ "First Women". zeenews.india.com. Archived from the original on 2017-08-06. Retrieved 2017-07-20.
- ↑ "Indian women Making India proud". timeskuwait.com. Archived from the original on 2018-11-06. Retrieved 2017-07-17.
- ↑ 6.0 6.1 "Vice-Chief apologises". archive.indianexpress.com. Retrieved 2017-07-20.
- ↑ Team, Editorial (2017-09-30). "Meet Major Priya Jhingan (Lady Cadet-1) - First Woman to Join Indian Army" (in en-US). SSBToSuccess. http://www.ssbtosuccess.com/major-priya-jhingan/.
- ↑ "The Faculty of English". sanawar.edu.in. Archived from the original on 2019-02-22. Retrieved 2017-08-06.
- ↑ "The Lawrence School, Sanawar". sanawar.edu.in. Archived from the original on 2019-02-22. Retrieved 2017-07-19.
- ↑ "Major Priya Jhingan". indiaschoolnews.com. Archived from the original on 2019-02-22. Retrieved 2017-08-06.
- ↑ "Expedition to Mt Kilimanjaro".