உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியா குரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியா குரியன்
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய வடிவமைப்பு நிறுவனம்-அகமதாபாத்து (2004)
பணிநகுதிறப் புத்தக எழுத்தாளர், விளக்கப்படத் தயாரிப்பாளர், இயங்குபட திரைப்படத் தயாரிப்பாளர்
விருதுகள்பெரிய சிறிய புத்தக விருது (2019)

பிரியா குரியன் (Priya Kuriyan) ஓர் இந்திய நகுதிறப் புத்தக எழுத்தாளரும், விளக்கப்படத் தயாரிப்பாளரும், இயங்குபட திரைப்படத்தயாரிப்பாளரும்,[1][2] கருநாடகாவின் பெங்களூருவை தளமாகக் கொண்டவரும் ஆவார்.[2][3]

கல்வி

[தொகு]

குரியன் 2004ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

குரியன் துலிகா புக்ஸின் விளக்கப்படத் தயாரிப்பளாரகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] அப்போதிருந்து, இவர் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு விளக்கப்படக் கலைஞராக இருந்து வருகிறார். மேலும் ரஸ்கின் பாண்ட், மனு எஸ். பிள்ளை, நடாசா சர்மா, மீரா நாயர், ஜெர்ரி பிண்டோ, இராதிகா சதா உள்ளிட்ட பல எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[4] முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்திரா (2018) என்ற வரைகலை நாவலுக்காக எழுத்தாளர் தேவப்ரியா ராயுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[5] ஓர் இயங்குபடத் தயாரிப்பாளராக, குரியன் இந்தியாவின் குழந்தைகள் திரைப்படச் சங்கத்திற்கான கல்வி இயங்கு படங்களையும், எள் தெருவின் இந்தியப் பதிப்பிற்கான அத்தியாயங்களையும் (கல்லி கல்லி சிம் சிம்) இயக்கியுள்ளார்.[6]

குரியன் அம்மாச்சியின் கண்ணாடி என்ற நகுதிறப் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.[4] மேலும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் பாராட்டப்பட்ட நாவலான பூனாச்சியின் படப் புத்தகம், குழந்தைகள் தழுவலின் ஆசிரியரும் ஆவார்.[7][8]

விருதுகள்

[தொகு]

2019ஆம் ஆண்டு மும்பை இலக்கிய விழாவில் குரியன் பெரிய சிறிய புத்தக விருதைப் பெற்றார்.[9]

புத்தகங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. George, Liza (2016-07-14). "Art of the imagination" (in en-IN). https://www.thehindu.com/features/metroplus/society/Art-of-the-imagination/article14488621.ece.
  2. 1 2 Chakrabarti, Paromita (2019-11-17). "More than words: Priya Kuriyan's illustrations capture the world of everyday quirks". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
  3. "Our masked identities: Cartoons of India's new normal" (in en-GB). 2020-05-31. https://www.bbc.com/news/world-asia-india-52792382.
  4. 1 2 3 Ray Chaudhuri, Zinnia (12 August 2017). "Priya Kuriyan's new book tells the story of an adorable, eccentric grandmother – without any words". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
  5. Kirpal, Neha (19 June 2019). "These 4 women graphic novelists have an agenda: Humanism and equality". CNBC TV18 (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
  6. Roy, Devapriya (10 June 2017). "Ten fabulously illustrated books for young readers that adults will enjoy just as much". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
  7. Venugopal, Nikhita (2020-08-24). "Perumal Murugan and illustrator Priya Kuriyan on children's adaptation of 'Poonachi'". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
  8. Ghoshal, Somak (2020-09-06). "Perumal Murugan's 'Poonachi' returns through Priya Kuriyan's art". Livemint (in ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
  9. "Big Little Book Awards 2019: Priya Kuriyan wins best illustrator, Prabhat bags prize for best children's literature in Hindi". Firstpost. 2019-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_குரியன்&oldid=4391223" இலிருந்து மீள்விக்கப்பட்டது