பிரியா கிருஷ்ணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப்ரியா கிருஷ்ணசாமி இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட, மும்பையில் வசித்து வரும் இந்திய திரைப்பட தொகுப்பாளராவார்.புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII) முன்னாள் மாணவரான இவர், பல்வேறு திரைப்படங்களில் திரைப்பட தொகுப்பாளராக நிபுணத்துவத்துடன் பணியாற்றி வருகிறார்.

திரைப்படத்திற்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்றுள்ள இவர், தொகுப்பாளராக மட்டுமின்றி இந்திய திரைப்படத்துறையில், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும்    இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார்.

2004 ஆம் ஆண்டில், ஆங்கிலத்தில் வெளியான, கேரளாவின் களரி கலையைப் பற்றிய ஆவணப்படமான, 'தி ஐ ஆஃப் தி ஃபிஷ் - தி கலரிஸ் ஆஃப் கேரளா' சிறந்த கலை / கலாச்சாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.[1]

2009 ம் ஆண்டில் வெளியான NFDCயின் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்களின் ஆய்வகத்தின் தயாரிப்பான கங்கூபாய் (2013) இந்தித் திரைப்படத்தின் மூலம் இவர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாயுள்ளார்.[2]

2019 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற பாரம் (2020) என்ற தமிழ் மொழி விறுவிறுப்பான திரைப்படத்தை இவரே திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி தொகுத்து, வெளியிட்டுள்ளார்.[3]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் என வரவு வைக்கப்பட்டது மொழி குறிப்புகள்
இயக்குனர் ஆசிரியர்
1988 ஓம்-தார்-பி-தார் No Yes ஹிந்தி
1989 பெர்சி No Yes குஜராத்தி நடிகையும் கூட
1990 காஃபிலா No Yes ஹிந்தி
1998 பாம்பே பாய்ஸ் No Yes ஹிந்தி
1999 போபால் எக்ஸ்பிரஸ் No Yes ஹிந்தி
2013 கங்கூபாய் Yes Yes ஹிந்தி எழுத்தாளரும் கூட
2020 பாரம் Yes Yes தமிழ் மேலும் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_கிருஷ்ணசாமி&oldid=3744015" இருந்து மீள்விக்கப்பட்டது