உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியா ஏ. எஸ்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியா ஏ. எஸ்.
இயற்பெயர்
பிரியா ஆனந்தவள்ளி சதாசிவன்
பிறப்பு28 மே 1967 (1967-05-28) (அகவை 58)
எரமல்லூர், சேர்த்தலை, கேரளம் இந்தியா
தொழில்எழுத்தாளர்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்இ. சி. இ. கே யூனியன் உயர்நிலைப்பள்ளி, குத்தியத்தோடு
மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம்
வகைசிறுகதை, நினைவுக் குறிப்புகள், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்புகள்
இலக்கிய இயக்கம்பின்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • பூக்கதிரிக்கான் எனிக்கவதிலே
  • குஞ்சு காரியங்கலுடே ஒடியத்தம்புரான்
  • சித்ரசலபகங்களுடே வீடு
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்உண்ணி
பிள்ளைகள்தன்மய் என்கிற குஞ்சுண்ணி
குடும்பத்தினர்
  • ஆனந்தவள்ளி (தாயார்_)
  • சதாசிவன் நாயர் (தந்தை)

பிரியா ஏ. எஸ். (Priya A. S.) மலையாள இலக்கியத்தின் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்புகள் மற்றும் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதுகிறார்.[1] அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் என்ற நூலை மலையாளத்தில் 'குஞ்சு காரியங்கலுடே ஒடியத்தம்புரான்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அதில் பல மொழிகளில் மொழிபெயர்ப்புகள் இருந்தபோதிலும், நூலின் மைய கதாபாத்திரங்களின் மொழியாக இருப்பதால், வேறு எந்த மொழிபெயர்ப்பும் தனக்கு அவ்வளவு முக்கியமல்ல என்று ராய் கூறியுள்ளார்.[2] பிரியா மூன்று முறை கேரளச் சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பிரியா ஏ.எஸ்., மே 28, 1967 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலைக்கு அருகிலுள்ள எரமல்லூரில் கே.ஆர். சதாசிவன் நாயர் மற்றும் ஆனந்தவல்லி என்ற ஆசிரியர் தம்பதியினருக்குப் பிறந்தார்.[3] பிரியா தனது குழந்தைப்பருவத்தில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார்.[4] [5] பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தனியார் கல்வி மூலம் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பு, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.[6] பிரியா கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மூத்த தர உதவியாளராக உள்ளார்.

பிரியா உண்ணி என்பவரை மணந்தார், இவர்களுக்கு தன்மோய் என்கிற குஞ்சுண்ணி என்ற மகன் உள்ளார்.[7]

விருதுகள்

[தொகு]

மஞ்சமரங்கள் சுட்டிலும் என்ற சிறுகதைத் தொகுப்பு, 2003 ஆம் ஆண்டில் பிரியாவுக்கு சிறந்த இளம் பெண் எழுத்தாளர் விருதான லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருதைப் பெற்றுத் தந்தது.[8] கேரளச் சாகித்திய அகாதமி, இவரது ஜகரூகா என்ற மற்றொரு சிறுகதைத் தொகுப்பை 2004 ஆம் ஆண்டு வருடாந்திர கதை விருதுக்காகத் தேர்ந்தெடுத்தது.[9] ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, சாகித்ய அகாதமி, எழுத்தாளர் அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் என்ற நூலின் மொழிபெயர்ப்பான குஞ்சு காரியங்களுடே ஒடெய்தம்புரான் புதினத்திற்காக 2014 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசை வழங்கி கௌரவித்தது.[10] இடையில், 2012 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான இவரது படைப்பான அம்மாம் குஞ்சுன்னீம் குஞ்சுன்னீம் அம்மாம் நூலுக்காக சித்தார்த்த இலக்கிய விருதைப் பெற்றார். குழந்தை இலக்கியத்துக்கான கேரள சாகித்ய அகாதமி விருதை இரண்டு முறையும், 2006ல் சித்திரசாலபங்களுடே வீடு என்ற தொகுப்புக்காகவும், 2010ல் பெருமழையாதே குஞ்சிதாலுகள் என்ற தொகுப்பிற்காகவும் பெற்றார்.[11] [12] பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது, மொழிபெயர்ப்புக்கான வி.கே. உண்ணிகிருஷ்ணன் விருது, கிருகலட்சுமி விருது, அங்கனம் சாகித்ய விருது மற்றும் ராமு காரியத் விருது போன்ற பல கௌரவங்களை இவர் வென்றுள்ளார். பிரியா தனது பெருமழையதே குஞ்சிதழுக்கள் என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி பால சாகித்ய புரஸ்கார் விருதை 2023-இல் பெற்றார். [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A. S. Jibina. "പ്രിയലോകം". Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 6 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106071623/http://www.mathrubhumi.com/mb4eves/online/malayalam/kerala/women/articles/features-article-314715. 
  2. K. P. M. Basheer. "Estha, Rahel now speak Malayalam". The Hindu. http://www.thehindu.com/news/cities/Kochi/estha-rahel-now-speak-malayalam/article1156883.ece. 
  3. "About Author Priya A S". keralabookstore.com (in ஆங்கிலம்). 2019-03-28. Retrieved 2019-03-28.
  4. "Spainadanam". Madhyamam. 19 September 2016. Retrieved 2019-03-29.
  5. "Priya A S - Interview". Webindia123.com. January 27, 2014. Retrieved 2019-03-29.
  6. "അക്ഷരത്തിന്റെ സൗന്ദര്യവും തലയെടുപ്പും". Indian Express Malayalam (in மலையாளம்). 2018-06-27. Retrieved 2019-03-29.
  7. "Asundharakandam". Madhyamam. 27 July 2016. Retrieved 2019-03-29.
  8. "MT Vasudevan chosen for Lalithambika Award". 31 March 2003. http://articles.timesofindia.indiatimes.com/2003-03-31/thiruvananthapuram/27270707_1_malayalam-literature-cash-prize-memento. 
  9. "Sahitya Akademi awards announced". 25 May 2005. http://www.thehindu.com/2005/05/25/stories/2005052513930400.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Sahitya Akademi Translation Award - 2014" (PDF). சாகித்திய அகாதமி. 9 March 2015. Retrieved 20 July 2015.
  11. "Kerala Sahitya Akademi Award for Children's Literature" (in மலையாளம்). கேரளச் சாகித்திய அகாதமி. Archived from the original on 6 November 2012. Retrieved 21 February 2023.
  12. "Kerala Sahitya Akademi awards announced, Sethu and Sreedharan honoured with fellowships". The New Indian Express. 17 August 2021. Retrieved 2021-08-18.
  13. "Sahitya Akademi Bal Sahitya Puraskar 2023" (PDF). sahitya-akademi.gov.in. Retrieved 29 June 2023.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Priya A. S.
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ஏ._எஸ்.&oldid=4258850" இலிருந்து மீள்விக்கப்பட்டது