பிரியம்வதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரியம்வதா தேவி (Priyamvada Devi)(1871-1935) என்பவர்வங்காள மொழி எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தேவி 1871-ல் பிரித்தானியாவின் இந்தியாவில் வங்காள மாகாணத்தில் உள்ள பப்னா மாவட்டத்தில் குணைகாச்சாவில் பிறந்தார். இவரது தாயார் பிரசன்னமோயி ஒரு பிரபல எழுத்தாளர். இவரது தந்தை கிருஷ்ணகுமார் பாக்சி. இவரது மாமாக்கள் பிரமாதா சௌத்ரி மற்றும் அசுதோஷ் சௌத்ரி, குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் ஆவர். இவர் பெதுன் பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.[2][3]

தொழில்[தொகு]

தேவி 1892-ல் தாராதாசு பானர்ஜியை மணந்தார். இவரது கணவர் ஒரு வழக்கறிஞர். இவரது மகன் 1896-ல் இறந்தார். இதன் பிறகு இவர் தனது நேரத்தை எழுதுவதோடு தனது பரோபகாரப் பணியில் ஈடுபடுத்தினார். இவர் பிரம்மோ பாலிகா சிக்ஷாலயாவில் (பிரம்மோ பெண்கள் பள்ளி) ஆசிரியராகச் சேர்ந்தார். தேவி பாரத ஸ்திரீ-மகாமண்டலின் தலைவராக பணியாற்றினார். இந்த நேரத்தில் இவர் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். சமசுகிருத நாடகமான ஸ்வப்னவாசவதத்தை மொழிபெயர்த்தார். விவிலியப் பகுதிகளை மொழிபெயர்த்து பக்தவாணி என்ற பெயரில் வெளியிட்டார். இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் "வுமென் ஆப் ஜப்பான்” (Women of Japan), கதா ஓ உப்பகதா (Katha O Upakatha), ஜிலெஜபேகலே சிகர் ஆனந்த் (Jhilejabgale Shikar Anath), பவூச்சுலா (Pavchulal), மற்றும் ரேணுக-அ புக் ஆப் கெய்ச்காசு இன் ஜப்பான் (Renuka, a book of Geishas in Japan) ஆகும். இவர் தாரா, ஆங்ஷு, ரேணு மற்றும் சம்பா ஓ பாருல் உள்ளிட்ட பல கவிதைகளையும் எழுதினார்.[2] இவர் தொண்டுக்காக நாடகங்களை இயக்கினார்.[4]

இறப்பு[தொகு]

தேவி 1935-ல் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Amin, S. N. (1996) (in en). The World of Muslim Women in Colonial Bengal, 1876-1939. Brill. பக். 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004106421. https://books.google.com/books?id=VcAfpv6x0m4C&dq=Priyamvada+Devi&pg=PA233. 
  2. 2.0 2.1 2.2 Banerjee, Suresh Chandra. "Devi, Priyamvada". Banglapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2017.
  3. History Of Bengali Literature. South Asia Books. 1979. பக். 300. https://books.google.com/books?id=Em5oAAAAMAAJ&q=Priyamvada+Devi. 
  4. Nāga, Kālidāsa (1951) (in en). Bethune School & College centenary volume, 1849-1949. Bethune School & College. பக். 151. https://books.google.com/books?id=N5MhAQAAMAAJ&q=Priyamvada+Devi. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியம்வதா_தேவி&oldid=3678136" இலிருந்து மீள்விக்கப்பட்டது