பிரியன்
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பிரியன் (பாடலாசிரியர்) | |
---|---|
பிறப்பு | பிரியன் திருச்சி, தமிழ்நாடு, ![]() |
தொழில் | கவிஞர் பாடலாசிரியர் |
பிரியன் என்பவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பாடலாசிரியர் பிரியன் (பிறப்பு – ஏப்ரல் 4) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். தேசியக்கல்லூரியில் இளங்கலை வணிகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் முடித்தவர். கல்லூரிக் காலத்தில் மாநகர அளவில் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பாடலாசிரியர்
[தொகு]2003 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஆட்டம்’ எனும் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானார். பல படங்களுக்குப் பின் இயக்குநர் மிஸ்கின் இயற்றிய ‘அஞ்சாதே’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மனசுக்குள் மனசுக்குள்’ பாடல் இவரை அடையாளப்படுத்தியது. அதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையில் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில் ‘புயலாய் புறப்படு’ பாடல் எழுதி, தொடர்ந்து நிறையப் பாடல்கள் இயற்றி வருகிறார். வேலாயுதம் படத்தில் இடம் பெற்ற ‘வேலா வேலா வேலாயுதம்’ பாடல் குறிப்பிடத்தக்க பாடலாகும்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயாகனாக நடித்த ‘நான்’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மக்காயாலா மக்காயாலா’ பாடல் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.[1] ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’ திரைப்படத்தில் இவர் இயற்றிய தன்னம்பிக்கைப் பாடலான ‘ஜனனம் ஜனனம்’ மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் ‘சலீம்’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மஸ்காரா போட்டு’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. இதுவரை ஏறத்தாழ 470 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் வரிகள் அமைத்துள்ளார்.
இவர் பாடலாசிரியராக மட்டுமில்லாது, சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் எனும் நன்னோக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் "தமிழ்த் திரைப்பாக்கூடம்" எனும் அமைப்பை உருவாக்கி, உலக அளவில் முதல் படிப்பாக.. தமிழ்த் திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்கான "திரைப்பாடல் இயற்றுநர்" எனும் பட்டயப் படிப்பை நடத்தி, பலருக்கு பாடல் எழுதும் பயிற்சியை கொடுத்து வருகிறார். முன்னணிப் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரடியாகக் கலந்துகொண்டு பயிற்சி அளித்துவரும் இவரது வகுப்பில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட இளம் பாடலாசிரியர்கள் திரைத்துறையில் பாடல் இயற்றி வருகின்றனர்.
கவியரசு கண்ணதாசன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் சர்வேதச அப்போஸ்தல பல்கலைக்கழகம் 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும் குளோபல் பீஸ் பல்கலைக்கழகம் (USA) 2017 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இயற்றிய சில பாடல்கள்
[தொகு]- கலகத்தலைவன் - நீளாதோ இன்னும் நீளாதோ..
- சினம் - கண்ணில் ஈரம்..
- கடாரம் கொண்டான் - கடாரம் கொண்டான்..
- நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - அன்பின் வழியது..
- படைவீரன் - லோக்கல் சரக்கா.. மற்றும் இதுவரை நான்..
- பிச்சைக்காரன் உனக்காக வருவேன்..
- சலீம் - மஸ்காரா போட்டு..
- கோலிசோடா - ஜனனம்.. ஜனனம்..
- நான் - மக்காயாலா.. மக்காயாலா..
- வேலாயுதம் - வேலா.. வேலா.. வேலாயுதம்..
- முரண் - இதுவரை என் நெஞ்சை.. மற்றும் நாளை என்னவென்று..
- யுவன் யுவதி -/உன் கண்ணைப் பார்த்த பிறகு..
- உத்தமபுத்திரன் - உசுமுலாரசே.. உசுமுலாரசே.. மற்றும் என் நெஞ்சு சின்ன இலை..
- நினைத்தாலே இனிக்கும் - செக்ஸி லேடி.. கிட்ட வாடி..
- தநா அல 4777 - சொர்க்கம் மதுவிலே..
- அ..ஆ..இ..ஈ - அ..ஆ..இ..ஈ சொல்லித் தருதே வானம்..
- ரசிக்கும் சீமானே - நான் உன்னைப் பார்க்கும் நேரம்..
- காதலில் விழுந்தேன் - டோலே.. டோலே.. புயலாய் புறப்படு..
- அஞ்சாதே -/மனசுக்குள் மனசுக்குள் புதுமழை..
- கடாரம் கொண்டான் - கடாரம் கொண்டான்..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்கயாலா... பொருள் சொல்கிறார் பாடலாசிரியர் பிரியன்". வெப்துனியா. Retrieved 31 சனவரி 2016.
https://piriyan.wordpress.com/ http://www.tamilpaa.com/tamil-lyricist-list/priyan பரணிடப்பட்டது 2016-06-20 at the வந்தவழி இயந்திரம் http://spicyonion.com/lyricist/priyan-songs/ https://www.youtube.com/watch?v=nyZ1fslHdfU http://mio.to/show/Lyricist/Priyan பரணிடப்பட்டது 2015-07-16 at the வந்தவழி இயந்திரம் http://entertainment.chennaipatrika.com/post/2016/03/22/Lyricist-Priyan-talks-about-Unakkaga-Varuven-song.aspx http://cinema.dinamalar.com/tamil-news/18001/cinema/Kollywood/sitemap.php http://lyricsspot.blogspot.in/2010/03/manasukkul-manasukkul-lyrics.html http://www.tsonglyrics.com/2011/08/makkayala-makkayala-lyrics-naan-song.html பரணிடப்பட்டது 2016-01-12 at the வந்தவழி இயந்திரம் http://tamil.lyricstonic.com/lyricist/priyan-lyricist-movie-tamil-songs-lyrics/[தொடர்பிழந்த இணைப்பு] https://www.facebook.com/lyricistpiriyan/ http://cinema.dinamalar.com/cinema-news/22960/special-report/Stories-should-decide-the-song-:-Lyricist-Priyan-special-interview.htm http://www.behindframes.com/lyricist-priyan-teaches-to-write-song/ https://patrikai.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/http://cinema.dinamalar.com/tamil-news/62420/cinema/Kollywood/Lyricist-wants-identity-says-Priyan.htm http://cinema.dinamalar.com/tamil-news/34191/cinema/Kollywood/Lyricist-Priyan-follow-Vaali-style.htm http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=6616&id1=124&issue=20160606 https://www.youtube.com/watch?v=CunIGgmR1_whttp://www.kuraltv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/ பரணிடப்பட்டது 2016-01-23 at the வந்தவழி இயந்திரம் https://www.youtube.com/watch?v=aw4OSbsFoUc http://cinemainbox.com/new-cinemadetail/743.html