பிரியதர்சினி மட்டூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரியதர்சினி மட்டூ (Priyadarshini Mattoo 23 ஜூலை 1970-23 ஜனவரி 1996) 25 வயது சட்ட மாணவி ஆவார், இவர் 23 ஜனவரி 1996 அன்று புதுதில்லியில் உள்ள அவரது மாமா வீட்டில் பாலியல் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அக்டோபர் 17, 2006 அன்று, பாலியல் வன்கலவி மற்றும் கொலை ஆகிய இரண்டு வழக்குகளிலும் சந்தோஷ் குமார் சிங் குற்றவாளி என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் அதே ஆண்டு அக்டோபர் 30 அன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது . 6 அக்டோபர் 2010 அன்று , இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. காவல் துறை அதிகாரியின் மகனான சந்தோஷ் குமார் சிங், 1999-ல் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார், மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பானது இந்தியாவில் ஒரு முக்கிய மாற்றமாக பரவலாக கருதப்பட்டது. கீழ் நீதிமன்றத்தில் உண்மைகள் சரியாக முன்வைக்கப்படாததால் இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.

வழக்கின் முக்கியத்துவம்[தொகு]

டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆர். எஸ். சோதி மற்றும் பி. கே. பாசின் ஆகியோர் வழக்கமாக வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது போல் அல்லாது ஒவ்வொரு சில மாதங்களுக்கு ஒருமுறை விசாரணை நடத்தி, நாளுக்கு நாள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு 42 நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக வழங்கப்பட்ட விடுவிப்பு ரத்து செய்யப்பட்டு சந்தோஷ் சிங் கொலை மற்றும் கற்பழிப்பு குற்றவாளி என கண்டறியப்பட்டது.

இந்தியாவில் உள்ள பல வழக்குகளில் பாரம்பரிய குற்றவியல் சட்ட அமைப்பின் பயனற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிற வழக்குகளில் இதுவும் ஒன்றாகும், குறிப்பாக ஜெசிகா லால் கொலை மற்றும் சஞ்சீவ் நந்தா குற்றவாளிகள் உட்பட உயர் வகுப்பு நபர்கள் குற்றவாளியாக இருக்கும் போது இவ்வாறு நடைபெறுகிறது.

குழந்தை பருவம்[தொகு]

பிரியதர்சினி காஷ்மீர் பண்டிதர்கள் சமூகத்தினைச் சேர்ந்தவர் . இவர் சிறிநகரில் வளர்ந்தார். பிரியதர்சினி சிறிநகரில் உள்ள பிரசன்டேஷன் மாடப் பள்ளியில் படித்து முடித்த பிறகு , காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதம் அதிகரித்ததால் அவர் தனது குடும்பத்துடன் சம்முவிற்கு குடிபெயர்ந்தார். இளங்கலைச் சட்ட பட்டம் பெற தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பு, சம்முவில் உள்ள எம்ஏஎம் கல்லூரியில் பிரியதர்சினி தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தினைப் பெற்றார். [1] தில்லியில் பயிலும் போது , சந்தோஷ் சிங் இவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் இவரது குடும்பத்தினர் முதல் தகவல் அறிக்கைகளை காவல் துறையில் பதிவு செய்தனர். சிறிது காலம் இவருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது,

கொலை[தொகு]

பிரியதர்சினி , மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, அவள் மாமாவின் வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். அவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, 14 முறை இரு சக்கர வகன தலைக் கவசத்தால் தாக்கப்பட்டார், இறுதியாக கம்பியால் கழுத்தை நெரிக்கப்பட்டார். கல்லூரியில் அவளது மூத்தவரான சந்தோஷ் குமார் சிங், பல ஆண்டுகளாக அவரை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். சந்தோஷ் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் - அவரது தந்தை ஜேபி சிங் அப்போது புதுச்சேரியில் காவல் துறை அதிகாரியாக இருந்தவர். விசாரணையின் போது அவர் குற்றம் நடந்த தில்லியில் காவல் துறை ஆணையராகப் பணியாற்றினார். இந்த தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) ஒப்படைத்தது. 1995 ஆம் ஆண்டில், பிரியதர்ஷினி, சந்தோஷ் சிங் தன்னைத் துன்புறுத்துவதாகவும், புகார் அளித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Mattoo birthday: Memories, march for justice-Delhi-Cities". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 July 2006 இம் மூலத்தில் இருந்து 2011-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110409032532/http://articles.timesofindia.indiatimes.com/2006-07-23/delhi/27785034_1_priyadarshini-mattoo-indu-jalali-chaman-lal-mattoo. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியதர்சினி_மட்டூ&oldid=3315581" இலிருந்து மீள்விக்கப்பட்டது