உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியங்கா தேசுபாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியங்கா தேசுபாண்டே
2020-இல் பிரியங்கா
பிறப்புபிரியங்கா தேசு பாண்டே
28 ஏப்ரல் 1990 (1990-04-28) (அகவை 36)
கருநாடகம்
கல்விஎத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
பணிதொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009 — தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரவீண் குமார் (தி. 2016)
[1]
வசி சச்சி (தி. 2025)
[2]

பிரியங்கா தேசுபாண்டே (Priyanka Deshpande, பிறப்பு: ஏப்ரல் 28, 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். இந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர்.[3] ஊ சொல்றியா ஊகும் சொல்றியா, கலக்கப் போவது யாரு?, சூப்பர் சிங்கர் ஜூனியர், எயார்டல் சூப்பர் சிங்கர், தி வால் (தமிழ்), ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை அன்லைக்டு, அழகிய பெண்ணே, கிளிப்ஸ், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் முதலிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதற்காகப் பரவலாக அறியப்படுகிறார்.[4] பிரியங்கா ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், விஜய் தொலைக்காட்சி ஆகிய பல்வேறு இந்தியத் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பிரியங்கா தேசுபாண்டே 28 ஏப்ரல் 1990 இல் கருநாடகாவில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்பே இவருடைய பெற்றோர் மகாராட்டிராவிலிருந்து கருநாடகாவுக்குக் குடிபெயர்ந்தனர். இவருக்கு ரோகித் தேசுபாண்டே என்ற ஒரு சகோதரர் இருக்கிறார்.[5] பிரியங்கா சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகு, செயின்ட் அந்தோணி பள்ளியில் இடைநிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பிரியங்கா தனது நீண்ட காலக் காதலரான பிரவீன் குமாரை 2016 இல் திருமணம் செய்து கொண்டார்.[6][7][8] அவருடனான மணமுறிவுக்குப் பிறகு, வசி சச்சி என்பவரை ஏப்ரல் 16, 2025 இல் திருமணம் செய்துகொண்டார்.[9]

தொழில்

[தொகு]

பிரியங்கா 2009 இல் ஜீ தமிழ் சேனலில் திஸ் சிர்பி கேர்ள், அழகிய பெண்ணே, இசை அன்ப்ளக்ட் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சன் டிவியில் சேர்ந்து நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய்யின் சினிமா காரம் காப்பி என்ற நிகழ்ச்சியை ம கா பா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கினார். பிரியங்கா ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவை நடிகர்களான வையாபுரி, ஆர்த்தியுடன் இணைந்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் அறிமுகமானார்.

2019-ஆம் ஆண்டில், பிரியங்கா ஸ்டார் விஜய்யில் ஸ்டார்ட் மியூசிக் என்கிற நிகழ்ச்சியைத் தொடங்கினார். ஜே. தர்மேந்திரா இயக்கிய ராணி ஆட்டம் [10] மற்றும் உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா போன்ற பல்வேறு குறும்படங்களில் நடிகையாகவும் பிரியங்கா அறிமுகமானார். இது சமூக ஊடகங்களிலும் பிரபலமாக இருந்த சோ சொக்கு வித் புகழ் என்ற இசைக் காணொளியிலும் பிரியங்கா தோன்றினார்.[11]

பிரியங்கா ம கா பா ஆனந்த் உடன் இணைந்து தி வால் (தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி) என்ற சர்வதேச நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.[12] தேவராட்டம் படத்தில் "மதுர பளப்பளக்குது" பாடலைப் பாடியுள்ளார். 2014 முதல், பிரியங்கா விஜய் தொலைக்காட்சி விருதுகளின் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

விருதுகள்

[தொகு]

பிரியங்கா ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் தோன்றியதன் மூலம், 2016-இல் சிறந்த பெண் தொகுப்பாளருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளைப் பெற்றார். 2017-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஆண்டு விழாவில் சிறந்த பெண் தொகுப்பாளர் விருதையும் வென்றார். 2018-ஆம் ஆண்டின் கலாட்டா நட்சத்திரத் தொலைக்காட்சி - திரைப்பட விருதுகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விருதை பிரியங்கா மீண்டும் வென்றார்.[13][14] இவர் தனது யூடியூப் சமூக ஊடகத் தளத்தின் பங்களிப்பிற்காக 2021 ஆம் ஆண்டில் பிளாக்சிப் டிஜிட்டல் விருது நிகழ்வில் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரம் என்ற விருதையும் பெற்றார்.[15] 2021 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 5 இல் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Photo feature - Priyanka's sweet wishes to her husband!". www.indiaglitz.com (in ஆங்கிலம்). March 2019. Retrieved 2021-11-05.
  2. ↑ "Bigg Boss Tamil fame Priyanka Deshpande ties the knot with Vasi in an intimate ceremony". The Times of India. 17 April 2025 – via The Economic Times - The Times of India.
  3. ↑ "Priyanka Deshpande gets emotional as her show 'Start Music 2' goes off-air, watch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
  4. ↑ "Priyanka Deshpande: A look at Tamil TV's highest-paid anchor's profile". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
  5. ↑ "Vijay TV Priyanka hospitalized suddenly". www.indiaglitz.com (in ஆங்கிலம்). 2 May 2021. Retrieved 2021-11-01.
  6. ↑ "நீயே இப்படி சொல்லலாமா பிரியங்கா: அவர் கதையை கேட்டு மற்ற போட்டியாளர்கள் ஷாக்". tamil.samayam.com. Retrieved 2021-11-01.
  7. ↑ "Priyanka says she is married". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
  8. ↑ "Reason why Priyanka did not speak about her husband". India Glitz (in ஆங்கிலம்). 21 January 2022. Retrieved 2022-01-27.
  9. ↑ "Vijay TV Fame Priyanka Deshpande's Divorce Rumours Continue; All You Need to Know". www.news18.com (in ஆங்கிலம்). 21 June 2022. Retrieved 2022-07-17.
  10. ↑ "Priyanka Deshpande short film". www.veethi.com (in ஆங்கிலம்).
  11. ↑ "One Episode Made Priyanka Trending". www.newsbricks.com (in ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
  12. ↑ "Tamil Tv Show The Wall Synopsis Aired On Star Vijay Channel". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 2021-10-18.
  13. ↑ "Who Is Priyanka Deshpande? Television Show Anchor In Bigg Boss Tamil 5". www.shethepeople.tv (in ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
  14. ↑ "Kollywood television superstar Priyanka Deshpande". nettv4u.com (in ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
  15. ↑ "Vijay Deverakonda makes Tamil TV anchor Priyanka Deshpande feel extremely special with a tight hug". www.bollywoodlife.com (in ஆங்கிலம்). 23 December 2019. Retrieved 2021-11-05.
  16. ↑ "Priyanka Deshpande is the first runner up of Bigg Boss Tamil Season 5". www.indiatvnews.com. 17 January 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_தேசுபாண்டே&oldid=4391195" இலிருந்து மீள்விக்கப்பட்டது