பிரியங்கா கேத்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரியங்கா கேத்கார் (Priyanka Khedkar) இந்தியாவின் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியில் பிறந்தார். இந்திய தேசிய மகளிர் கைப்பந்தாட்ட அணியில் பிரியங்கா கேத்காரும் ஓர் உறுப்பினர் ஆவார். தற்போது இவர் கைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2010 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடினார் [1][2]. பிராந்திய அளவில் நடைபெறும் கழக அளவிலான போட்டிகளில் கேத்கார் 2010 ஆம் ஆண்டு இந்திய இரயில்வே அணிக்காக விளையாடினார் [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_கேத்கார்&oldid=2720528" இருந்து மீள்விக்கப்பட்டது