உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிப்பு செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிப்பு செயல்முறை (Separation process) என்பது ஒன்றுக்கு மேற்பட்டு கலந்துள்ள இரசாயன பொருட்களில் இருந்து தேவையான பொருளை பிரிக்கும் முறையைக் குறிப்பது ஆகும்.[1] பிரித்தெடுத்தலானது இரசாயன பண்புகள் அல்லது அளவு, வடிவம், அடர்த்தி, அல்லது கலவை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும். பொதுவாக பிரிப்பு செயல்முறையானது பிரிக்க பயன்படுத்தும் செயல்முறைகளின்படி வகைப்படுத்தப்படுகின்றன.

ஒரு சில விதிவிலக்குகளை விடுத்து, பல தனிமங்கள் அல்லது வேதிச் சேர்மங்கள் கலவையாக இயற்கையாக தூய்மையற்ற நிலையிலே காணப்படுகின்றன. பெரும்பாலும் இந்த தூய்மையற்ற மூலப்பொருட்களை, சுத்திகரிக்கப்பட்ட மூலக்கூறுகளாக பிரிக்க வேண்டும், அதற்கு நவீன தொழிற்துறையின் பிரித்தல் நுட்பங்கள் அவசியம். அலுமினிய உலோகத்திற்காக பாக்சைட் தாது சுத்திகரிப்பதில் மின்னாற்பகுப்பைப் போலவே, சில நேரங்களில் இந்த பிரித்தெடுத்தலுக்கு முழு சுத்திகரிப்பு தேவைப்படுகிறது, ஆனால் முழுமையற்ற பிரித்தல் நுட்பத்தின் ஒரு நல்ல உதாரணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆகும். பல்வேறு நீரகக்கரிமங்கள் மற்றும் அசுத்தங்கள் ஆகியவற்றின் கலவையாக கச்சா எண்ணெய் உள்ளது. சுத்திகரிப்பு செயல்முறையில் இந்த கலவையை இயற்கை எரிவாயு, பெட்ரோல், இரசாயன மூலப்பொருட்களை போன்ற மற்ற மதிப்புமிக்க கலப்புகளாகப் பிரிக்கிறது, இதில் எதுவுமே தூய பொருட்கள் இல்லை, ஆனால் அவை ஒவ்வொன்றும் கச்சா எண்ணெயில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பங்களில், பிரிக்க விரும்பிய இறுதி பொருளைப் பெற பிரித்தெடுப்பதற்கான ஒரு தொடர் நிகழ்வு அவசியம்.   எண்ணெய் சுத்திகரிப்பு விஷயத்தில், கச்சா எண்ணெயானது, தனித்தனியான வடித்திறக்கல் வழிமுறைகளில் நீண்ட தொடர்வரிசை பணிக்கு உட்படுகிறது. ஒவ்வொன்றும் வேறுபட்ட தயாரிப்பு முறை அல்லது இடைநிலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிரிப்பு நுட்பங்களின் பட்டியல்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Wilson, Ian D.; Adlard, Edward R.; Cooke, Michael; et al., eds. (2000). Encyclopedia of separation science. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-226770-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிப்பு_செயல்முறை&oldid=3937423" இலிருந்து மீள்விக்கப்பட்டது