பிரின்சி மங்களிகா
பிரின்சி மங்களிகா (Princy Mangalika) என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு சமூக சேவகராவார். எச்ஐவி/எய்ட்சு எனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார்.[1] இலங்கையில் எய்ட்சு நோய்த்தொற்றை எதிர்த்து விரிப்புணர்வை ஏற்படுத்திய செயல்பாட்டினால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். எய்ட்சு வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான நேர்மறை பெண்கள் வலையமைப்பு என்ற அமைப்பை இவர் நிறுவினார்.[2] 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சர்வதேச மகளிர் தினத்தைத்யொட்டி, இலங்கையில் பன்னிரெண்டு பெண் சாதனையாளர்களில் ஒருவராக இவரும் அங்கீகரிக்கப்பட்டார்.[3][4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பிரின்சி 2003 ஆம் ஆண்டு இலங்கையின் மேற்கத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இரகமா என்ற ஊரில் பிறந்து வளர்ந்தார். கணவர் மூலம் இவருக்கு பால்வினை நோயால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.[5] எனவே பால்வினை நோய்க்கு பலியானதிலிருந்து இவரது சமூகத்தில் பாகுபாடு காட்டபட்டு தனித்து ஒதுக்கப்பட்டார். இதுவே நேர்மறை பெண்கள் வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க அடித்தளமாக அமைந்தது. பிரின்சியின் கணவர் வெளிநாட்டில் உள்ள ஒரு விடுதியில் பணிபுரிந்தபோது பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு தொற்றுக்கு ஆளாகியிருந்தார். இந்த நோய்த்தொற்று காரணமாக இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார் இதனால் பிரின்சியின் குடும்பத்தினரை கிராம மக்கள் ஊரைவிட்டே விரட்டியடித்தனர்.[6]
2003 ஆம் ஆண்டில் மங்களிகாவுக்கு எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டது. சமூக அவப்பெயரை சமாளிக்கவும், சிகிச்சை பெறவும், நோயுடன் தொடர்புடைய அவமான உணர்வை வெளியேற்றவும் வெட்கப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார்.பல நோயாளிகள் சிகிச்சை அல்லது சோதனைகளுக்கு செல்ல இடமில்லாமல் மங்களிகாவின் அலுவலகத்தில் வசிக்கிறார்கள். இவர் அவர்களுக்கு உணவளிக்கிறார். அவர்களின் பலவீனமான தருணங்களில் அவர்களுக்கு உதவுகிறார். இந்த காரணத்திற்காக இவருக்கு எப்போதும் நிதி உதவி தேவைப்பட்டது.
எய்ட்சு உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஒரு அரசு சாரா நிறுவனமான நேர்மறை பெண்கள் வலையமைப்பு என்ற அமைப்பின் பெருமைக்குரிய நிறுவனராக வாழ்ந்தார். இந்த அமைப்பின் மூலம் எச்.ஐ.வி பாதித்த 32 குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவப்பட்டது.
மங்களிகாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள். மங்களிகாவின் குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதங்கள் வரத் தொடங்கின. இவர்கள் வசிக்கும் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. தெருவில் இறங்கி இவர்கள் நடக்கும்போது ஆபாசமாக கத்தினார்கள். இந்தப் பெண் மற்றும் இவரது மகள்களுக்கான பிரச்சனைகள் முடிவடையாமல் தொடர்ந்தன. ஒரு நாள் இவர்கள் வீட்டுக்கும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
தொழில்
[தொகு]சமூகத்தில் இவரது குடும்பம் தவறாக நடத்தப்பட்டதால், தனது 53 ஆவது வயதில் பிரின்சி எய்ட்சு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கவனித்துக்கொள்ளும் நோக்கத்துடன், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மருத்துவர் கமலிகா அபேரத்னவுடன் இணைந்து 2009 ஆம் ஆண்டில் நேர்மறை பெண்கள் வலையமைப்பை நிறுவினார்.[7] 2012 ஆம் ஆண்டில் எய்ட்சு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த சிறந்த சமூக சேவைகளுக்காக இவரது அமைப்பான நேர்மறை பெண்கள் வலையமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சிவப்பு நாடா விருதைப் பெற்றது.[8] 2016 ஆம் ஆண்டில் அடா தெரானா இலங்கையர் என்ற விருதின் ஒரு பகுதியாக அன்சங் ஈரோயின் என்ற விருதும் வழங்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ubeyratne, Renushi (2019-03-08). "Iconic Sri Lankan Women Who Have Shaped History". Pulse (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-12-01.
- ↑ AsiaNews.it. "Mangalika's story: an HIV-positive Catholic woman helps fellow AIDS patients". www.asianews.it. Retrieved 2019-12-01.
- ↑ "Sri Lanka : Sri Lanka parliament celebrates Sri Lankan Women Changemakers". www.colombopage.com. Retrieved 2019-12-01.
- ↑ Mudalige, Disna; Indrakumar, Camelia Nathaniel and Menaka. "Twelve prominent women to be celebrated". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2019-12-01.
- ↑ "Before Judging, See The Bigger Picture | The Sunday Leader" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-11-13. Retrieved 2019-12-01.
- ↑ "Life Online - The Right To Education". www.life.lk (in English). Retrieved 2019-12-01.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "'මේ ගෙදරිනුත් යන්න වෙලා'- HIV ආසාදිත වීරවරියකගේ කතාව" (in en-GB). 2016-10-04. https://www.bbc.com/sinhala/37552379.
- ↑ "Red Ribbon Award recognizes the work of Sri Lankan Women Living with HIV". www.unaids.org (in ஆங்கிலம்). Retrieved 2019-12-01.
- ↑ "Ada Derana Sri Lankan of the Year 2016 - Award Winners". Adaderana.lk. Retrieved 2019-12-01.