பிரிந்திசைத் துள்ளல் ஓசை
Appearance
யாப்பருங்கலம் என்னும் நூல் கலிப்பாவின் துள்ளல் ஓசையை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. [1] அவற்றுள் ஒன்று பிரிந்திசைத் துள்ளல் ஓசை
- கலிப்பா எடுத்துக்காட்டு
மணிகிளர் நெடுமுடி வானவனும் தன்முனும்போன்(று)
அணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்
நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம்
இரைநயந் திறைகூரும் ஏமஞ்சால் துறைவகேள் [2]
- விளக்கம்
இந்தக் கலிப்பாவில் கலித்தளையுடன் பிற தளைகளும் விரவி வந்துள்ளமையால் பிரிந்திசைக் கலிப்பா.
மேற்கோள்
[தொகு]- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 226
- ↑ கண்ணனும் அவன் அண்ணன் பலராமனும் கடலும் கடற்கரை மணலும் போலத் தோன்றினர். அங்கே அன்னம் கடல் நுரை போல இருப்பபுக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட துறைத் தலைவனே! நான் சொல்வதைக் கேள் என்று தோழி கூறுகிறாள் - இது பாடல் தரும் செய்தி