பிரித்தி சங்கர்
பிரித்தி சங்கர் (Priti Shankar) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். வடிவமைப்பு, முறையான மொழிக் கோட்பாடு மற்றும் வழிமுறை குறியீட்டுக் கோட்பாடு ஆகிய பகுதிகளில் இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்தியது.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]பிரித்தி சங்கர் ஒரு கோவா குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை இன்னோசென்சியோ மாண்டிரோ இந்திய இராணுவத்தில் பிரிகேடியர் எனப்படும் படைப்பகுதித் தலைவராக இருந்தார். தாயார் சோபியா கணிதம் மற்றும் பிரெஞ்சு மொழி ஆசிரியராகவும் இருந்தார்.[2]
1958 ஆம் ஆண்டில் இவரது பெற்றோர் புனே கடக்வாசுலாவில் இருந்து சம்முவிற்கு குடிபெயர்ந்தனர், அங்கு இவரின் தந்தை சுரன்கோட்டில் இந்தியா-பாக்கித்தான் எல்லையில் பணியாற்றினார். இந்த நடவடிக்கையின் விளைவாக பிரித்தி ஆறு மாதம் பள்ளிக்கூடம் போக முடியாமல் போனது. எனவே இவரது தாயார் வீட்டில் பயிற்சி பெற்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் புனேவுக்குத் திரும்பினார், மேலும் பெர்குசன் கல்லூரியில் சேர்ந்தார்.[3] பின்னர் தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றார். இந்நிறுவனத்திலிருந்து 1968 ஆம் ஆண்டில் மின் பொறியியலில் இளங்கலை தொழில்நுட்ப பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்புக்கு உரியவர் ஆனார்.[2][3] பட்டப்படிப்பைத் தொடர்ந்து அவர் மேரிலாந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தார். அங்கிருந்து 1972 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[4] ஒரு வருடம் கழித்து இவர் இந்தியா திரும்பினார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் தானியங்கித் தொழில்நுட்ப மையத்தில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.[3]
1979 ஆம் ஆண்டில் பிரித்தி ஒரு பி. சி. எச் குறியீடு எனப்படும் போசு-சௌதுரி-ஒக்கெங்கெம் குறியீடுகளை உருவாக்கி அறிவியலில் ஒரு முன்னோடியாக இருந்தார், இக்குறியீடுகள் வரையறுக்கப்பட்ட புலங்களில் வரையறுக்கப்பட்டன, எனவே வரையறுக்கப்பட்ட வளையங்களில் செயல்படத் தொடங்கின. 2002 ஆம் ஆண்டில் இவர் ஒய். என். சிறீகாந்துடன் இணைந்து அமெரிக்க வெளியீட்டுக் குழுவான சி. ஆர். சி அச்சகத்தில் இணை ஆசிரியராக இருந்தார். மேலும் இந்தியாவின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழான ரெசோனன்சு தலைமைக் குழுவிலும் பணியாற்றினார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பிரித்திக்கு ஏராளமான உடன்பிறப்புகள் இருந்தனர், இதில் சுனிதா நோரோன்கா, ஒரு கோட்பாட்டு இயற்பியலாளரான விவேக் மாண்டிரோ, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஊடக ஆய்வுகள் பேராசிரியருமான அஞ்சலி மாண்டிரோ, வளர்ச்சி மற்றும் நடத்தை குழந்தை மருத்துவர் நந்திதா டி சோசா ஆகியோர் இவரது சகோதர சகோதரிகளில் அடங்குவர்.[2] 1974 ஆம் ஆண்டில் பெங்களூரின் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் கோட்பாட்டு திரவ இயக்கவியலாளரான பி. என். சங்கரை பிரித்தி திருமணம் செய்து கொண்டார். 1976 ஆம் ஆண்டில் இவர் நாச்சிகேத் என்ற மகனைப் பெற்றெடுத்தார், 1983 ஆம் ஆண்டில் மிருதுளா என்ற மகள் பிறந்தார்.
கௌரவங்கள்
[தொகு]2007 ஆம் ஆண்டில், சிறந்த கற்பித்தலுக்காக ஜெய ஜெயந்த் விருதைப் பெற்றார். 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனத்தால் புகழ்பெற்ற விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.[2]
மரபு
[தொகு]பிரபலமான பிரித்தி சங்கர் கணிதம் மற்றும் அறிவியல் நூலகம் நவ்னிர்மிட்டி கற்றல் அறக்கட்டளையின் யு. எம். இ. டி கட்டிடத்தில் அமைந்துள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PROFESSOR PRITI SHANKAR" (PDF). Indian Academy of Sciences. Retrieved 18 November 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Priti Shankar (1947–2011)". Current Science 102 (3). 2012. https://pritishankarhomage.files.wordpress.com/2011/10/pritishankar-currentscience.pdf.
- ↑ 3.0 3.1 3.2 "From the abstract to the concrete". Computer Science Association இம் மூலத்தில் இருந்து 13 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191013072451/https://www.csa.iisc.ac.in/news/284-285.pdf. பார்த்த நாள்: 18 November 2018.
- ↑ "Priti Monteiro (Shankar)". Mathematics Genealogy Project Department of Mathematics North Dakota State University. Retrieved 18 November 2018.
- ↑ "Priti Shankar Library". Navnirmiti Learning Foundation. Archived from the original on 11 December 2018. Retrieved 18 November 2018.