பிரித்தானியக் காட்டுப்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானியக் காட்டுப்பகுதி (British wildwood), அல்லது சுருக்கமாகக் காட்டுப்பகுதி (wildwood) என்பது இங்கிலாந்தின் பிரதான பகுதிகளில் வளர்ந்து வரும் முழுமையான இயற்கை நிலமாகும், இது கடைசிப் பனியுகத்திற்குப் பின்னர் உருவானது. இவ்வனம் மனிதர் தலையீட்டால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இந்த மரக்காட்டில் இங்கிலாந்தின் காணமுடியாத அரிய வகை உயிரினங்களான பழுப்புக் கரடிகள் மற்றும் காட்டுமான் ஆகியவை காணப்படுகின்றன. இது பலவகை உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகிறது. பல நூற்றாண்டுகளாக, புதிய கற்காலம் தொடங்கி, இந்த வனப்பகுதி மனிதர்கள் அதிகரிப்பினால் சமவெளியாகவும் திறந்த வெளிகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் சுயலாபத்திற்காக இவ்வனப்பகுதியை சுரண்டுவதோடு பயன்படுத்தவும் தொடங்கினர். இங்கிலாத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் பெரும்பாலானவை முழுமையான காட்டுப்பகுதியினுடையதாகும். ஆனால் இப்பொழுது தன் இயற்கை அமைப்பை இழந்து அரை இயற்கைக் காடுகளாகக் காணப்படுகின்றன. இதற்கு மரங்கள் விறகுகளாக வெட்டப்படுதல் முக்கிய காரணமாகும். இவ்வனப்பகுதி பண்டைய வனப்பகுதியாக அறியப்படுகிறது. இனி இங்கிலாத்தில் இனிமையாக காட்டு பகுதியை காணுதல் அரிதாகும் என கருதப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ancient Woodland". Exmoor National Park, UK. Archived from the original on 7 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.
  2. "An Introduction to Britain's Lost Wildwood". South Coast Central: A Guide To England's South-Central Region. Archived from the original on 26 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

  • Ancient Woodland". Woodlands.co.uk blog. Retrieved 4 May 2013.
  • Ben Aldiss (30 June 2006). "Making Hay". http://www.tes.co.uk. TES. Retrieved 12 May 2013. External link in |website= (help)