பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களுக்கான இராயல் நிறுவனத் தலைமையகம்

பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான இராயல் நிறுவனம் (Royal Institute of British Architects) என்பது கட்டிடக்கலைஞர்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்பட்ட ஒரு உயர்தொழில் முறை நிறுவனம் ஆகும். தொடக்கத்தில் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னர் அனைத்துலக கட்டிடக் கலைஞர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கட்டிடக் கலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்நிறுவனத்திற்கு 1837 ஆம் ஆண்டு எழுத்துப்பூர்வமான அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. 1971 இல் இந்நிறுவனத்திற்கு துணை அதிகாரமும் வழங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

1834 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது இலண்டன் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்கள் சங்கம் என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டது. பிரித்தானியாவின் முக்கிய கட்டிடக் கலைஞர்களான டெசிமசு பார்டன்[1], பிலிப் ஆர்டுவிக், தாமசு அல்லோம், வில்லியம் தாந்தோர்ன், தாமசு லெவெர்டன் டொனால்டுசன், வில்லியம் ஆடம்சு நிக்கோல்சன், யான் பியூனோரொட்டி பாப்வொர்த், தாமசு டி கிரே மற்றும் இரண்டாம் இயர்ல் டி கிரே உள்ளிட்ட கலைஞர்கள் இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக இருந்தார்கள்[2].

பிரித்தானிய அரசின் நிதி உதவி கிடைக்கப் பெற்றவுடன் இலண்டன் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களின் ராயல் நிறுவனம் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டது. இறுதியாக 1892 இல் இப்பெயர் தலைநகர் இலண்டனுக்கும் அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் தற்போதைய தலைமை இடமான போர்ட்லேண்டு பிளேசு என்ற இடத்திற்கு 1934 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டது. அரசர் ஐந்தாம் சியார்ச்சும் இராணி மேரியும் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

அரசின் அதிகாரப் பத்திரம்[தொகு]

அரசர் நான்காம் வில்லியம் காலத்தில் 1837 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு உரிய அரசு அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டது. 1887, 1909, 1925 ஆம் ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்பட்ட பிற்சேர்க்கை அதிகாரங்கள் அனைத்தும் 1971 ஆம் ஆண்டு ஒன்றாக்கப்பட்டன. அன்று முதல் அவ்வப்போது சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கட்டிடக் கலையை மேலும் மேம்படுத்துதல் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேரு வகையான பிற துறை சார்ந்த கலை மற்றும் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் அவற்றை கட்டிடக் கலையில் பயன்படுத்துதல் போன்ற பொதுவான இலக்கை மையமாகக் கொண்டுதான் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்பாடுகளுக்கு வழிகாட்ட அமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டன. இவ்விதிகள் அவசியத்தின் அடிப்படையில் அடிக்கடி புதுப்பிக்கப்பட்டன. புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல்களில் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என ஒரு பாதுகாப்பு விதியும் இயற்றப்பட்டிருந்தது [3].

அமைப்பு[தொகு]

பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களுக்கான ராயல் நிறுவனம் 44,000 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் தங்களை நிறுவனத்தின் கட்டிடக் கலைஞர் என்று சொல்லிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அங்கத்தினர்கள் அவர்கள் பெயர்களின் பின்னாலும் இந்நிறுவனத்தின் பெயரை சேர்த்துக் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. மாணவ உறுப்பினர்களுக்கு இத்தகைய உரிமைகள் அளிக்கப்படவில்லை. முன்னதாக இந்நிறுவனத்தில் ஆய்வு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது வழங்கப்படுவதில்லை. இருப்பினும்; இந்த தலைப்பை தொடர்ந்து வைத்திருப்பவர்கள் அதற்கு பதிலாக நிறுவனத்தின் பெயருக்கு முன்னால் உறுப்பினர் என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் அணுக முடியும். நிறுவனத்தால் வெளியிடப்படும் மாதாந்த பத்திரிகையையும் தொடர்ந்து இவர்கள் பெறுவார்கள்.

2008 [4] ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களுக்கான ராயல் சங்கத்திற்கு ஒரு வணிகத் தர அடையாளம் [5] அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் 66 போர்ட்லேண்டு பிளேசு என்ற இடத்தில் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களின் ராயல் நிறுவனம் கட்டப்பட்டுள்ளது. எட்வர்ட் பைன்பிரிட்ச்சு கோப்நல் மற்றும் யேம்சு உட்ஃபோர்டு போன்ற சிற்பிகளின் துணையுடன் சியார்ச்சு கிரே வோர்னம் இக்கட்டிடத்தை வடிவமைத்தார். இந்த லண்டன் கட்டிடத்தின் பகுதிகள் நூலகன் உட்பட பொது மக்களுக்காக திறக்கப்படுகின்றன. இங்கு ஒரு மிகப்பெரிய கட்டடக்கலை தொடர்பான புத்தகக் கடை, ஓர் உணவகம் மற்றும் விரிவுரை அரங்குகள் முதலியவை உள்ளன். நிகழ்வுகளுக்கு அறைகள் வாடகைக்கும் விடப்படுகின்றன.

மண்டலங்கள்[தொகு]

ஐக்கிய இராச்சியம் முழுவதும் இந்நிறுவனத்திற்கு பனிரெண்டு மண்டல அலுவலகங்கள் உள்ளன. கிழக்கு இங்கிலாந்திற்கான முதலாவது மண்டலம் கேம்பிரிட்சில் 1966 இல் திறக்கப்பட்டது.

 • கிழக்கு – கிரேட் செஃபோர்டு
 • கிழக்கு மத்தியநிலப்பகுதி – ஆர்க்ரைட் கட்டிடம், நாட்டிங்காம் டிரெண்ட் பல்கலைக்கழகம்
 • இலண்டன் – போர்ட்லேண்டு பிளேசு
 • வடகிழக்கு – நார்த்தும்பிரியா பல்கலைக்கழகம்
 • வடமேற்கு – லிவர்பூல்
 • தெற்கு மற்றும் தென்கிழக்கு – ரீடிங் பல்கலைக்கழகம்
 • தென்மேற்கு மற்றும் வெசெக்சு – பிரிசுடோல்
 • மேற்கு மத்தியநிலப்பகுதி – பிரிம்மிங்காம்
 • யாக்சையர் – லீட்சு
 • வேல்சு – மார்கான் ஆர்கேடு, கார்டிப் [6]
 • வடக்கு அயர்லாந்து – உல்சுடர் [7]
 • இசுக்காட்லாந்து – இசுக்காட்லாந்து [8]
 • அமெரிக்கா [9]

மேற்கோள்கள்[தொகு]

 1. Dictionary of Scottish Architects, Decimus Burton பரணிடப்பட்டது 2020-02-26 at the வந்தவழி இயந்திரம். Retrieved 18 June 2016.
 2. Port, M.H. "Founders of the Royal Institute of British Architects (act. 1834–1835)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press.  (Subscription or UK public library membership required.)
 3. about the RIBA Charter and Byelaws "Archived copy". 26 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link) |Text of the Charter and Byelaws "Archived copy" (PDF). 4 நவம்பர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 மே 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 4. "RIBA Named as Business Superbrand". dexigner.com. 2 March 2008. 14 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Superbrands". superbrands.uk.com. 14 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 6. "WALES (RSAW)". RIBA. 28 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. "RSUA - Royal Society of Ulster Architects". www.rsua.org.uk. 14 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. RIAS. "The Royal Incorporation of Architects in Scotland : RIAS". www.rias.org.uk. 14 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Calendar of Events". www.riba-usa.org. 30 செப்டம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 March 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கத்தின் இணையத் தளம் பரணிடப்பட்டது 2007-06-30 at the வந்தவழி இயந்திரம்