பிரிட்ஜ்கோபால் ஹரிகிஷன் லோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரிட்ஜ்கோபால் ஹர்கிஷன் லோயா
பிறப்பு12 டிசம்பர் 1966
கேட்காவ்ன் (லாத்தூர், மகாராட்டிரா
இறப்பு1 டிசம்பர் 2014
பணிநீதிபதி
பிரிட்ஜ்கோபால் ஹரிகிஷன் லோயா
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
பதவியில்
சூன் 2014 – டிசம்பர் 2014
முன்னவர் ஜெ. டி. உத்பாத்
பின்வந்தவர் எம். பி. கோசாவி

பிரிட்ஜ்கோபால் ஹரிகிஷன் லோயா ( Brijgopal Harkishan Loya) (1966 - 2014) மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் போது, சர்ச்சைக்கிடமான வகையில் நாக்பூரில் இறந்தவர். இவரது தீடீர் மரணம், இந்திய அளவில் சந்தேகமாக அறியப்பட்டது.

சொராபுதீன் சேக் போலி எண்கவுண்டர் வழக்கில், மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், 1 டிசம்பர் 2014 அன்று நாக்பூரில் மர்மமான முறையில் இறந்தார்.

நீதிபதி லோயா சந்தேக மரணம் குறித்தான வழக்கு மனுவை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து, 19 ஏப்ரல் 2018 அன்று தள்ளுபடி செய்ததுடன், லோயாவின் மரணம் இயற்கையானது என தீர்ப்பளித்தது.[1]

வரலாறு[தொகு]

22 நவம்பர் 2005 அன்று ஐதராபாதிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணித்த சொராபுதீன் சேக் மற்றும் அவரது மனைவி கௌசர் ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் நடத்தப்பட்ட மற்றொரு போலி என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சொராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரிப்பதற்கு, நீதிபதி லோயா, சூன் 2014ல், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட்டார்.[2] இக்கொலை வழக்கு விசாரணையின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை விசாரிக்க, நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தர நீதிபதி லோயா ஆனையிட்டார்.[3] [3][4]

நீதிபதி லோயா தன்னுடன் பணிபுரிந்தவரின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 30 நவம்பர் 2014 அன்று நாக்பூர் சென்றார். [2][5] நாக்பூரில் ரவி பவன் எனும் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி லோயா, 1 டிசம்பர் 2014 அன்று காலை 4 மணி அளவில் நெஞ்சு வலியால் துடித்தார். மருத்துவச் சிகிச்சைக்கான இரண்டு மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட லோயா, காலை 6.15 மணிக்கு மாரடைப்பால் இறந்தார்.[5] அவரது உடலை குடும்ப நண்பர் ஒருவர் லாத்தூருக்கு எடுத்துச் சென்றார். நீதிபதி லோயாவின் சட்டை காலரில் இரத்தக் கறை படிந்திருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.[6] அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.[6]

நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 30 டிசம்பர் 2014ல் அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.[2]

நீதிபதி லோயா இறப்பு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க பொதுநல வழக்கு[தொகு]

நீதிபதி லோயாவின் சந்தேக மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

15 சனவரி 2018ல் இவ்வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.[7][8][9][10]

19 ஏப்ரல் 2018 அன்று இம்மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்தது.

லோயா மரணம் தொடர்பாக 4 அதிகாரிகள் விசாரணையில் எந்த சந்தேகமும் இல்லை. பொது நல வழக்குகள் உள்நோக்கமுடையது. மேலும் இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை எனவும் நீதிபதிகள் கூறி பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "SC dismisses PIL seeking probe into judge Loya's death - Times of India ►". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/sc-dismisses-pil-seeking-probe-into-judge-loyas-death/articleshow/63826836.cms. 
 2. 2.0 2.1 2.2 Raman, Anuradha; Shaini, K. S.; Sengupta, Uttam; Pinglay-Plumber, Prachi (15 November 2015). "The Amit Shah Files". Outlook. Archived from the original on 4 December 2017. https://www.outlookindia.com/magazine/story/the-amit-shah-files/293300. பார்த்த நாள்: 14 January 2018. 
 3. 3.0 3.1 Takle, Niranjan (21 November 2017). "Chief Justice Mohit Shah Made An Offer Of Rs 100 Crore To My Brother For A Favourable Judgment In The Sohrabuddin Case: Late Judge Loya’s Sister". Archived from the original on 23 December 2017. http://www.caravanmagazine.in/vantage/loya-chief-justice-mohit-shah-offer-100-crore-favourable-judgment-sohrabuddin-case. 
 4. "India Supreme Court judges: Democracy is in danger". பிபிசி. 12 January 2018. Archived from the original on 14 January 2018. http://www.bbc.co.uk/news/world-asia-india-42660391. பார்த்த நாள்: 2018-01-14. 
 5. 5.0 5.1 Sharma, Supriya; Chari, Mridula (2 December 2017). "‘He said he was stressed’: Tracking CBI judge Brijgopal Loya’s last journey from Nagpur to Latur". Scroll.in. Archived from the original on 10 January 2018. https://scroll.in/article/859981/he-said-he-was-stressed-tracking-cbi-judge-brijgopal-loyas-last-journey-from-nagpur-to-latur. பார்த்த நாள்: 14 January 2018. 
 6. 6.0 6.1 Singh, Manas Pratap; Gupta, Saurabh (26 November 2017). "Retracing Final Hours Of Justice Loya, Who Handled Amit Shah Case". NDTV (NDTV Convergence). Archived from the original on 9 January 2018. https://www.ndtv.com/india-news/from-nagpur-to-latur-retracing-last-few-hours-of-justice-loya-1780039. பார்த்த நாள்: 14 January 2018. 
 7. "Judge Loya death: 'Serious matter', needs bi-parte hearing, says SC". டெக்கன் குரோனிக்கள் (12 January 2018). மூல முகவரியிலிருந்து 13 January 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 January 2018.
 8. "SC to hear tomorrow pleas for probe in judge BH Loya’s death". Hindustan Times (11 January 2018). மூல முகவரியிலிருந்து 12 January 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 January 2018.
 9. "CBI judge BH Loya’s death in 2014: Nothing suspicious, say two Bombay HC judges who were at hospital". The Indian Express. Indian Express Limited (27 November 2017). மூல முகவரியிலிருந்து 13 January 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 January 2018.
 10. "Five-Point Guide To The Judge Loya Controversy". NDTV.com. Archived from the original on 14 January 2018. https://www.ndtv.com/india-news/five-point-guide-to-the-judge-loya-controversy-1799250. 
 11. Judge Loya case hearing highlights: SC rejects probe demand into his death, says petitioners tried to ‘scandalise’ judiciary

வெளி இணைப்புகள்[தொகு]