பிரிஜிட் பார்டோ
தோற்றம்
(பிரிஜிட் பார்டோட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரிஜிட் பார்டோ Brigitte Bardot | |
|---|---|
1962 இல் பார்டோ | |
| பிறப்பு | பிரிஜிட் ஆன்-மரீ பார்டோ செப்டம்பர் 28, 1934 பாரிசு, பிரான்சு |
| இறப்பு | திசம்பர் 28, 2025 (அகவை 91)
[1] துலோன், பிரான்சு |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1952–1973 (பொழுதுபோக்காளர்) 1973–2025 (ஆர்வலர்) |
| அரசியல் கட்சி | தேசியப் பேரணி |
| வாழ்க்கைத் துணை |
|
| பிள்ளைகள் | 1 |
| கையொப்பம் | |
பிரிஜிட் பார்டோ (Brigitte Bardot, செப்டம்பர் 28, 1934 – திசம்பர் 28, 2025) ஒரு பிரெஞ்சு முன்னாள் நடிகை. பாடகியாகவும், விளம்பர அழகியாகவும், விலங்குரிமை ஆர்வலராகவும் இருந்தார். அவர் 1950கள் மற்றும் 1960களில் பாலியல் சின்னமாக விளங்கினார்.
இன்ப வாழ்க்கையைக் கொண்ட கதாபாத்திரங்களை சித்தரிப்பதில் பிரபலமான இவர், மேற்கத்தைய பாலியல் புரட்சியின் சிறந்த அடையாளங்களில் ஒருவராக இருந்தார். 1973 ஆம் ஆண்டு பொழுதுபோக்குத் துறையிலிருந்து அவர் விலகிய போதிலும், அவர் ஒரு முக்கிய பாப் கலாச்சாரச் சின்னமாகவே இருந்தார்.[2] இவர் 47 திரைப்படங்களிலும், பல இசை நாடகங்களிலும் நடித்துள்ளார். 60-இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்தார். 1985 ஆம் ஆண்டில் இவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.europe1.fr/culture/en-direct-mort-de-brigitte-bardot-emmanuel-macron-rend-hommage-a-une-legende-du-siecle-876669
- ↑ Wypijewski, Joann (30 March 2011). "Elizabeth Taylor: What Becomes a Legend Most". The Nation.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரிஜிட் பார்டோ
- பிரிஜிட் பார்டோ at the டர்னர் கிளாசிக் மூவி