பிரிசு கோணமானி


பிரிசு கோணமானி (Bris sextant) என்பது வழக்கமான கோண அளவீட்டுக் கருவியல்ல. கடல் மற்றும் வானியல் வழிசெலுத்தலில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய, எளிய கோணமானி கருவியாக இது அறியப்படுகிறது.[1][2] இக்கருவியினால் பல கோணங்களை அளவிட முடியாது. ஆனால் இரட்டை பிரதிபலிப்பு முறையால் மிகத் துல்லியமாக சில குறிப்பிட்ட கோணங்களை அளவிடலாம். கடலில் பயணம் செய்யும் மாலுமிகள் சூரியன் அல்லது நட்சத்திரங்களின் உயரக் கோணத்தை அளந்து தங்களின் இருப்பிடத்தை கணக்கிட இந்த கருவியை பயன்படுத்தினர். சிறிய அளவு மற்றும் எளிய பயன்பாடு காரணமாக இது அவசர வழிசெலுத்தல் கருவியாகவும் பயன்பட்டது. பிரிசு கோணமானி ஓர் உண்மையான பிரதிபலிப்பு கருவியாகும். தனது மிகுந்த துல்லியத்தை, எண்கோணமானி போன்ற உண்மையான கோணமானி மற்றும் பிற பிரதிபலிப்பு கருவிகளின் அடிப்படைக் கொள்கையான இரட்டை பிரதிபலிப்பு என்ற அதே கொள்கையிலிருந்து பெறுகிறது.[3]
வரலாறு
[தொகு]சுவென் இயர்விந்து என்பவர், குறைந்த செலவு மற்றும் எளிய தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி கடல் பயணங்களை மேற்கொள்ளும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, 2007 ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்போ பிரிசு கோணமானியை உருவாக்கினார்.[3][4][5] பிரிசு கோணமானி என்பது குறைந்த தொழில்நுட்பம் கொண்ட, மிகுந்த துல்லியமுடைய, நிலையான இடைவெளி அளவீட்டு கருவி ஆகும். இது இரண்டு குறுகிய, தட்டையான கண்ணாடித் துண்டுகள் கொண்டு உருவாக்கப்பட்டது. அவை நிரந்தரமாகவும் உறுதியாகவும் V வடிவில் பொருத்தப்பட்டு, மூன்றாவது தட்டையான பற்றவைப்பு கண்ணாடி துண்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பற்றவைப்புக் கண்ணாடி, சூரியனைப் பாதுகாப்பாகக் கண்களால் பார்க்க உதவுகிறது. சூரியன் அல்லது சந்திரனை இந்த V வடிவ அமைப்பின் வழியாகப் பார்க்கும்போது, அதன் படம் எட்டு தனித்தனி படங்களாகப் பிரிந்து தோன்றும். இந்தக் கருவி மிகவும் சிறியதாகவும் வலுவானதாகவும் இருப்பதால், சுமார் 3 செ.மீ. விட்டமும் 4 செ.மீ. உயரமும் கொண்ட, நீர் புகாத 35 மி.மீ. புகைப்படச் சுருள் பெட்டியில் வைத்துச் சேமிக்க முடியும். மேலும், இதை ஒரு கயிற்றில் தொங்கவிட்டு கழுத்தில் அணிந்துகொண்டு எளிதாக எடுத்துச் செல்லவும் முடியும்.
பிரிசு கோணமானி ஓர் அறியப்பட்ட புவியியல் இருப்பிடத்தில், துல்லியமான ஒரு கடிகாரம் மற்றும் ஒரு கடற்பயண வானியல் அட்டவணை ஆகியவற்றின் உதவியுடன் அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது. நாள் முழுவதும், பார்வை அளவீட்டு கணக்கீடுகளை பின்னோக்கிச் செய்து, கருவியில் தோன்றும் ஒவ்வொரு படத்தின் மேல் மற்றும் கீழ் விளிம்புகளுக்கான துல்லியமான கோணங்கள் கணக்கிடப்படுகின்றன.[4][3] சூரியனும் சந்திரனும் பூமியின் மேற்பரப்பிலிருந்து பார்க்கும்போது ஏறத்தாழ ஒரே அளவிலான கோண விட்டத்தை கொண்டிருப்பதால், அவற்றிற்கும் ஒரே அளவுத்திருத்த மதிப்புகளைப் பயன்படுத்த முடியும்.
பிரிசு கோணமானியைப் பயன்படுத்தும்போது, ஒரு படத்தின் விளிம்பு அடிவானத்தைத் தொடும் வரை காத்திருந்து, பின்னர் அந்த நேரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின், அப்படத்தின் அவ்விளிம்பிற்காகப் பதிவு செய்யப்பட்ட கோணத்தைப் பயன்படுத்தி அளவீட்டை மேற்கொள்ள வேண்டும்.
பெயர்க்காரணம்
[தொகு]பிரிசு என்பது சுவீடிய மொழியில் தென்றல் என்று பொருள்படும். இர்விந்து தனது பல பாய்மரப் படகுகளுக்கு பிரிசு என்ற பெயரையே சூட்டியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nenninger, Garet G. (April 2000). "Easily Constructed Mini-Sextant Demonstrates Optical Principles" (PDF). Archived (PDF) from the original on November 23, 2024. Retrieved November 22, 2024.
- ↑ "The world's smallest Sextant: Bris-Minisextant". Cassens & Plath. Archived from the original on October 11, 2007.
- 1 2 3 Villmoare, Brian (2022-01-01). "Determination of latitude by two fixed-altitude sightings". Journal of Navigation 75 (4): 805–812. doi:10.1017/S0373463322000406. பன்னாட்டுத் தர தொடர் எண்:0373-4633. https://www.academia.edu/85642586.
- 1 2 Yrvind, Sven (October 2008). "Aspects of Yrvind- Bris' Sextant" (PDF). Amateur Yacht Research Society. Archived (PDF) from the original on April 18, 2024. Retrieved November 22, 2024.
- ↑ Yrvind (2017-11-19). "Bris mini sextant". Simple habits, simple boat (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2024-11-23. Retrieved 2024-11-23.
உசாத்துணை =
[தொகு]- A three-page article (not available online) on the Bris sextant appeared in Yachting Monthly magazine, June 1997.
- A two-page article (not available online) on the Bris sextant appeared in Die Yacht magazine, 22/1997: Mini-Sextant: Mit einem genial einfachen Gerät verblufft Weltumsegler Sven Lundin jetzt die gesamte Fachwelt.
- Bris Mini Sextant Instructions, page 2, Sven Yrvind, 1998