பிராவதி பரிதா
பிராவதி பரிதா Pravati Parida | |
---|---|
![]() | |
4ஆவது ஒடிசா துணைமுதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2024 Serving with கணக் வர்தன் சிங் தியோ | |
ஆளுநர் | கம்பம்பதி அரி பாபு (current) |
முன்னையவர் | பசந்த் குமார் பிசுவால் |
உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | சமிர் இரஞ்சன் தாசு |
தொகுதி | நிமாபாரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 மே 1966[1] |
பிரவதி பரிதா (Pravati Parida)(பிறப்பு 12 மே 1966) என்பவர் ஒடிசாவினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்வர் ஆனார். இவர் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, சக்தி திட்டம், சுற்றுலா அமைச்சராகவும் உள்ளார். பூரி மாவட்டத்தில் உள்ள நிமாபாரா சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2][3][4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]பரிதா நிமாபராவைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் அரசு ஊழியரான சியாம் சுந்தர் நாயக்கை மணந்தார். 1995-ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சட்டம் முடித்த இவர், இதே ஆண்டில் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். பின்னர், பரிதா 2005-ஆம் ஆண்டில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தினை உத்கல் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]பரிதா 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிமாபாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இவர் இத்தேர்தலில் 95,430 வாக்குகளைப் பெற்று பிஜு ஜனதா தளத்தின் திலீப் குமார் நாயக்கை 4,588 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7][8]
சூன் 12, 2024 அன்று, புவனேசுவரத்தில்ல் உள்ள ஜனதா மைதானத்தில் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் மோகன் சரண் மாஜி ஆகியோருடன் ஒடிசாவின் துணை முதல்வராக இவர் பதவியேற்றார். ஆளுநர் இரகுபர் தாசு இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக ஆளும் 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.[9][10] ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்வர் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://odishaassembly.nic.in/image.aspx?img=1557
- ↑ "Full list of Odisha Assembly elections 2024 winners". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-06.
- ↑ "Pravati Parida , BJP Election Results LIVE: Latest Updates On Pravati Parida, Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. Retrieved 2024-06-06.
- ↑ "Who is Mohan Charan Majhi, BJP's first Odisha CM". The Times of India. 11 June 2024. Retrieved 11 June 2024.
- ↑ "Pravati Parida(Bharatiya Janata Party(BJP)): Constituency- NIMAPARA(PURI) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-06.
- ↑ "Nimapara Assembly Election Result 2024: BJD's Dilip Kumar Nayak to take on BJP's Parvati Parida". 2024-06-04. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/nimapara-election-result-2024-bhubaneswar-nimapara-assembly-election-poll-results-updates/articleshow/110675471.cms.
- ↑ "Nimapara Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
- ↑ "Nimapara Assembly Election Results 2024: Nimapara Odisha Election Schedule, Vote share and Results". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-06. Retrieved 2024-06-06.
- ↑ "Highlights: BJP Tribal Leader, 4-Time MLA Mohan Majhi Sworn In As Odisha Chief Minister". NDTV.com. Retrieved 2024-06-13.
- ↑ "Odisha New CM Live Updates: Mohan Charan Majhi declared new Odisha Chief Minister, KV Singh Deo, Pravati Parida to be Deputy CMs". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-11. Retrieved 2024-06-11.