பிரார்த்தனா சமாஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரார்த்தனை சமாஜம் (Prarthana Samaj), ஆத்மராம் பாண்டுரகா என்பவரால் (கேசவ் சந்திரசென் உதவியுடன்) 1867 ம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் துவக்கப்பட்டது. 'வாய்மையே வெல்லும்' என்னும் வாசகத்தை குறிக்கோளுரையாக கொண்டது. இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்களில் ஒருவரான் மகாதேவ கோவிந்த ராண்டே , ராமகிருஷ்ண கோபால் பந்தர்கார், கோபால கிருஷ்ண கோகலே, நாராயணன் சந்த்தர்வார்கர் போன்ற தலைவர்கள் பிரார்த்தனா சமாஜத்தில் இருந்தனர்.

இந்த சமாஜம் உருவ வழிபாடு மற்றும் மூட பழக்க வழக்கங்களை எதிர்த்தது. அவதாரங்களையும் அதிசய செயல்களையும் கண்டித்தது. புனித நூல்களில் கூறி உள்ளவை அனைத்தும் உண்மை என்னும் கருத்தை மறுத்தது. ஓரிறை கொள்கை மற்றும் சமூக சீர்திருத்தம் பிரார்த்தனா சமாஜத்தின் நோக்கங்களாகும். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே இடைத்தரகர்களுக்கு இடமில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தது.

பிரார்த்தனா சமாஜம் நூற்றுக்கணக்கான துவக்க இடைநிலை பள்ளிகள், இரவுப் பள்ளிகள் , அநாதை இல்லங்கள், மகளிர் அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் ஆகியவற்றை நடத்திற்று. குழந்தை திருமண தடுப்பு, விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்ற சீர்திருத்தங்களைத் தீவிரமாக மேற்கொண்டது.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரார்த்தனா_சமாஜம்&oldid=2092211" இருந்து மீள்விக்கப்பட்டது