உள்ளடக்கத்துக்குச் செல்

பிராம்ப்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராம்ப்டன்
நகரம்
அடைபெயர்(கள்): பூக்கள் நகரம் (அல்லது மலர் நகரம்[1])
ஒண்டாரியோ மாநிலத்தில் பீல் வட்டாரத்தில் அமைவிடம்
ஒண்டாரியோ மாநிலத்தில் பீல் வட்டாரத்தில் அமைவிடம்
நாடு கனடா
மாநிலம் ஒன்றாரியோ
நகராட்சி வட்டாரம்பீல் வட்டார நகராட்சி
நிறுவியது1853 (சிற்றூர்)
 1873 (ஊர்)
 1974 (நகரம்)
அரசு
 • மேயர்சூசன் பென்னல்
 • ஆட்சி அமைப்புபிராம்ப்டன் நகர மன்றம்
 • கனடிய மக்களவை உறுப்பினர்கள்
உறுப்பினர் பட்டியல்
  • ஈவ் ஆடம்சு (கனடிய கன்சர்வேடிவ் கட்சி)
  • பரம் கில் (கனடிய கன்சர்வேடிவ் கட்சி)
  • பால் கோசால் (கனடிய கன்சர்வேடிவ் கட்சி)
  • கைல் சீபாக் ((கனடிய கன்சர்வேடிவ் கட்சி))
 • ஒண்டாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
உறுப்பினர் பட்டியல்
  • விக் தில்லோன் (ஒண்டாரியோ லிபரல் கட்சி)
  • லிண்டா ஜெப்ரி (ஒண்டாரியோ லிபரல் கட்சி)
  • ஜக்மீத் சிங் (ஒண்டாரியோ புது மக்கள் கட்சி)
  • அம்ரித் மங்கத் (ஒண்டாரியோ லிபரல் கட்சி)
பரப்பளவு
 • நிலம்266.71 km2 (102.98 sq mi)
ஏற்றம்
218 m (715 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,23,911 (கனடாவின் பெரிய நகராட்சிகளில் ஒன்பதாவது)
 • அடர்த்தி1,964.35/km2 (5,087.6/sq mi)
நேர வலயம்ஒசநே−5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (EDT)
இடக் குறியீடு905/289
இணையதளம்www.brampton.ca

பிராம்ப்டன் (Brampton) கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் பெரும் டோரண்டோ பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நகரமும் பீல் வட்டார நகராட்சியின் தலைமையிடமும் ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பிராம்ப்டனின் மக்கள்தொகை 523,911 ஆக இருந்ததது. இதன்படி இது கனடாவின் பெரிய நகராட்சிகளில் ஒன்பதாவதாக உள்ளது. மேலும் சராசரி அகவை 33.7ஆக மதிப்பிடப்பட்டு பெரும் டொராண்டோ பகுதியிலேயே மிகவும் இளைய வயதினரைக் கொண்ட சமூகமாக விளங்குகிறது. பிராம்ப்டன் மக்கள்தொகையில் 36% நபர்கள் தெற்கு ஆசிய இனத்தவராவர்.[2]

1853ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள இதே பெயர்கொண்ட ஊரின் பெயரைக் கொண்டு ஓர் சிற்றூராக நிறுவப்பட்டது. இந்த நகரில் விளங்கும் பசுமைக் குடில் தொழிலை முன்னிட்டு கனடாவின் மலர்கள் நகரம் என அழைக்கப்பட்டது. தனது உரோசாக்களுக்காக பல பன்னாட்டு விருதுகளை வாங்கியுள்ள டேல்ஸ் பிளவர்ஸ் இங்குள்ளது. இன்றைய நாளில் இந்நகரின் முதன்மை தொழில்களாக மேம்பட்ட தயாரிப்பு, நுகர்வு வணிக மேலாண்மை மற்றும் ஏற்பாடுகள் , தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் குடிநீர்மங்கள், உயிரி அறிவியல் மற்றும் வணிகச் சேவைகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rayburn, Alan (2001). Naming Canada: Stories about Canadian Place Names. Toronto: University of Toronto Press. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8020-8293-0. Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராம்ப்டன்&oldid=3563556" இலிருந்து மீள்விக்கப்பட்டது