பிரான்மலைக் குடைவரை கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரான்மலைக் குடைவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பிரான்மலைக் குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் சிங்கம்புணரிக்கு அண்மையில் உள்ள பிரான்மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது ஒரு சிறிய குடைவரை கோயில். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]

அமைப்பு[தொகு]

பிரான்மலையில் கிழக்குத்திசை நோக்கிக் குடையப்பட்டுள்ள இக்குடைவரை, பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிறிய குடைவரைகளுள் ஒன்று. ஆனாலும், கருவறையுடன், இடைகழி, அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகிய பகுதிகளும் இக்குடைவரையில் உள்ளன. தூண்கள் எதுவும் காணப்படவில்லை.[2]

சிற்பங்கள்[தொகு]

கருவறையில் உமாதேவியும் சிவனும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். கருவறைக்கு வெளியே இருமருங்கும் பெண் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.173
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 169.