உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்டு முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்டு முள்ளெலி[1]
இராசசுத்தானின் பிரான்டு முள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Erinaceomorpha
குடும்பம்:
Erinaceidae
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. hypomelas
துணையினம்:
P.h. hypomelas,
P.h.blanfordi,
P.h. eversmanni,
P.h. sabaeus,
P.h. seniculus
இருசொற் பெயரீடு
Paraechinus hypomelas
(பிரான்டு, 1836)
பிரான்டு முள்ளெலி பரம்பல்

பிரான்டு முள்ளெலி (Brandt's Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர், Paraechinus hypomelas) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனத்திற்கு, இரசிய நாட்டிலிருக்கும் இரசிய அறிவியல் கழக விலங்கியல் துறையின் இயக்குநராக இருந்த, பிரான்டு [note 2] என்பவரைப் போற்றும் வகையில் பெயரிடப்பட்டது.

வாழிடம்

[தொகு]

இந்த சிற்றினத்தின் தாயகம் மத்திய கிழக்கு நாடுகளும், நடு ஆசியாவும் ஆகும். இங்கு பாலைவனத்தில், இவை வாழ்கின்றன. வறண்ட சூழ்நிலையில் வாழ்கிறது. குறிப்பாக மலையிலும், பாலைவனத்திலும் வாழ்கிறது. குழிப்பறித்து வங்கு அமைக்கும் திறமையிருப்பினும், இயற்கையிலேயே இருக்கும் புதைவிடங்களைத் தேர்ந்தெடுத்து, தன் வாழ்விடத்தினை அமைத்துக் கொள்கிறது.

குளிர்காலங்களில், தனது உடலின் வளர்சிதை மாற்றங்களைக் குறைத்துக் கொள்ளும் இயல்புடையதாக இருக்கிறது. இச்சமயங்களில், பெரும்பாலும் தூங்கும் பழக்கம் உடையதாக இருக்கிறது.

வளரியல்பு

[தொகு]

இதன் உருவம் மேற்கு ஐரோப்பிய முள்ளெலி போன்றே இருக்கும். ஆனால், அந்த முள்ளெலிகளின் காதுகளை விட, இதன் காதுகள் பெரிதாக இருக்கும். இக்காதுகள் நீள்காது முள்ளெலிகளை போன்று இருக்கும். இதன் உடல் எடை ஏறத்தாழ 500-900 கிராம் வரை இருக்கிறது. இதன் உடல் நீளம் 25 செ.மீ வரை உள்ளது.

உடலின் மேற்புறம் காணப்படும் முட்கள் எடை குறைவாக இருப்பதால், வேகமாக இயங்கும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. முட்கள் எடை குறைவாக இருந்தாலும், அதன் வலுத்தன்மை சிறப்பாக இருக்கிறது. கையால் வருடுவதை ஏற்கிறது. இருப்பினும், பல நேரங்களில் துள்ளி குதித்து, அதன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. பகல் நேரங்களில், ஓய்வு எடுக்கும் இயல்புடையதாக இருக்கிறது.. இரவு நேரங்களில், நன்கு இயங்கும் குணம் உடைய இரவாடி வகையினைச் சார்ந்தது.

ஊடகக் காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Erinaceinae - முள்ளெலிகள்
  2. Johann Friedrich von Brandt - யோகன் ஃபிரட்டுரிச் வோன் பிரான்டு

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிரான்டு முள்ளெலி - Paraechinus hypomelas அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  2. Insectivore Specialist Group (1996). Paraechinus hypomelas. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-மே 12.அன்று அதன் தரவுதளத்தில், இவ்வினத்திதற்கு குறைந்த அழிவாய்ப்பு இருப்பதற்கானக் காரணம் சேர்க்கப்பட்டது.

இதர இணைய இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்டு_முள்ளெலி&oldid=3408464" இலிருந்து மீள்விக்கப்பட்டது