உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்சுலெட்டின் உருவப்படம்

பிரான்சு இரிட்டர் ஃபான் சாக்சுலெட்டு (Franz Ritter von Soxhlet, சனவரி 12, 1848 – மே 5, 1926) செருமனியைச் சேர்ந்த வேளாண்மை வேதியியலாளர். இவர் 1879 இல் வேதிப்பொருள்களுக்கான வடிகட்டிப் பிரிப்பான் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1886 இல் பாசுச்சரைசேசன் (pasteurization) என்னும் சூடாக்கிக் குளிர்வித்து நுண்ணுயிரி நீக்கு முறையை பால் முதலிய பருகுநீர்மங்களுக்கு முன்மொழிந்தார். இவரே முதன் முதலாக பாலின் புரதங்களாகிய கேசைன் (casein), ஆல்புமின், குளோபுலின் இலாக்டோபுரதம் ஆகியவற்றை சூடாக்கி வடித்துப் பிரித்தெடுத்தவர். இவர் 1872 இல் முனைவர் பட்டத்தை இலைப்சிசில் பெற்றார். இவர் பெல்சிய நாட்டுக் குடும்பம் ஒன்றின் வழி வந்தவர்.

சாக்ஃசுலெட்டு பிரிப்பான் (Soxhlet extractor)

உசாத்துணை

[தொகு]
  • Rosenau, M.J.: The Milk Question, Houghton Mifflin Company, Boston, 1913.
  • Soxhlet, F.: Die gewichtsanalytische Bestimmung des Milchfettes, Polytechnisches J. (Dingler's) 1879, 232, 461
  • Rommel, Otto: Franz von Soxhlet Münchener Medizinische Wochenschrift 73 (1926) 994–995
  • Österreichisches Biographisches Lexikon, XII. Band, [Schwarz] Marie – Spannagel Rudolf, Wien 2005

படைப்புகள்

[தொகு]
  • Herzfeld: Franz von Soxhlet †. In: Die Deutsche Zuckerindustrie Vol. 51, 1926, pp. 501–502.
  • Theodor Henkel: Franz von Soxhlet zum Gedächtnis. In: Süddeutsche Molkerei-Zeitung Vol. 46, 1926, pp. 493–494 (m. Bild u. Schriftenverzeichnis).