பிரான்சுவா டு பிளெசீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரான்சுவா டு பிளெசீ
Francois du Plessis
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பான்சுவா டு பிளெசிஸ்
பட்டப்பெயர் "FAF"
பிறப்பு 13 சூலை 1984 (1984-07-13) (அகவை 35)
தென்னாபிரிக்கா
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை சகலதுறை, 20 ஓவர் கிரிக்கெட் கேப்டன்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 314) நவம்பர் 2, 2012: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு ஜனவரி 2, 2015: எ மேற்கிந்தியத்தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 101) ஜனவரி 18, 2011: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 3, 2015:  எ அயர்லாந்து
சட்டை இல. 79
முதல் இ20ப போட்டி (cap 52) செப்டம்பர் 8, 2012: எ இங்கிலாந்து
கடைசி இ20ப போட்டி மார்ச் 11, 2015:  எ மேற்கிந்தியத்தீவுகள்
சட்டை இல. 79
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2004 வடக்கத்தியத் துடுப்பாட்ட அணி
2005–தற்போது டைட்டன்ஸ்
2008–2009 லங்காசயர்
2011 சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 மேல்பொர்ன் ரேனேகடெசு
2014–தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ்
தரவுகள்
தேர்வுஒ.நாஏ-தரஇ20
ஆட்டங்கள் 20 71 186 120
ஓட்டங்கள் 1428 2,213 5,947 2,601
துடுப்பாட்ட சராசரி 52.20 35.69 41.15 26.12
100கள்/50கள் 3/2 2/12 10/27 1/13
அதிகூடிய ஓட்டங்கள் 137 126 126 119
பந்துவீச்சுகள் 72 192 2,196 790
வீழ்த்தல்கள் 0 2 54 50
பந்துவீச்சு சராசரி n/a 94.50 36.72 18.34
5 வீழ்./ஆட்டம் 0 0 0 2
10 வீழ்./ஆட்டம் 0 n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு 0/8 1/8 4/47 5/19
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 11/– 41/– 103/– 49/–

மார்ச் 3, 2015 தரவுப்படி மூலம்: [{{{source}}}]

பிரான்சுவா டு பிளெசீ (Francois 'Faf' du Plessis, பிறப்பு: 13 சூலை 1984)[1], தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை சுழல் திருப்ப பந்துவீச்சாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் 3 ஆவது வீர்ராக களமிறங்கினார். இவர் நார்தன்ஸ், லன்காஷயர் மற்றும் டைட்டன்ஸ் , மெல்போர்ன் ரெனெகடஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[1]

2012 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவரின் முதல் போட்டியிலேயே நூறு அடித்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் நூறு அடித்த நான்காவது தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனை படைத்தார்.[2] நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] பின் பெப்ரவரி 2013 இல் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]

டிசம்பர் 2016 இல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் ஆகஸ்டு 2017 இல் ஏ பி டி வில்லியர்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பின்பு அனைத்து வடிவ போட்டிகளுக்கும் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6]

சர்வதேச போட்டிகள்[தொகு]

சனவரி 18, 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 60 ஓட்டங்கள் எடுத்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை தொடரில் அல்பி மோகலுக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில்அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 6 ஆவது மட்டையாளராக அறிமுகமானார். ஜே பி டுமினிக்கு காயம் ஏற்பட்டதால் இவர் விளையாடும் அணியில் அணியில் இடம்பெற்றார்.

இந்தப் போட்டியில் 188 ஒட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்தப் போட்டியானது சமனில்முடிந்தது. பின் ஆத்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 159 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்து பென் ஹில்பென்ஹாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 8 ஆவது இணைக்கு ஜாக் கலிசுடன் இணைந்து 93 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டம் 338 ஆக அதிகரிக்க உதவினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் அணியைத் தோல்வியிலிருந்து மீட்பதற்காக சிறப்பாக விளையாடி 376 பந்துகளைச் சந்தித்த இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110* ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியின் போது 466 மணித்துளிகள் இவர் களத்தில் இருந்தார். இவர் 6 ஆவது இணைக்கு ஜாக் கலிசுடன் இணைந்து போட்டியை சமன் பெறச் செய்தனர். இந்த இணையில் இவர் மட்டும் 99 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2018[தொகு]

2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவரை கிங்சு இலெவன் பஞ்சாபு அணி 1.6 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. பின் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தக்கவைத்தது.[1] மே 10,2018 அன்றுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 71 ஓட்டங்களை எடுத்திள்ளார். இவரின் அதிகபட்ச ஒட்டம் 33 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட்116.39 ஆகும்.[1]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

தேர்வு சதங்கள்[தொகு]

பிரான்சுவா டு பிளெசீயின் தேர்வு சதங்கள்
ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு நிகழ்விடம் ஆண்டு முடிவு
[1] 110*  ஆத்திரேலியா ஆத்திரேலியாவின் கொடி அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2012 சமன்
[2] 137  நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா கொடி போர்ட் எலிசபெத், தென்னாப்பிரிக்கா புனித ஜார்ஜ் நீள்வட்ட அரங்கம் 2013 வெற்றி
[3] 134  இந்தியா தென்னாப்பிரிக்கா கொடி ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா வான்டெரெர்சு அரங்கம் 2013 சமன்
[4] 103  மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்கா கொடி போர்ட் எலிசபெத், தென்னாப்பிரிக்கா புனித ஜார்ஜ் நீள்வட்ட அரங்கம் 2014 சமன்

ஒருநாள் பன்னாட்டு சதங்கள்[தொகு]

பிரான்சுவா டு பிளெசீயின் ஒருநாள் அனைத்துலக சதங்கள்
ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு நிகழ்விடம் ஆண்டு முடிவு
[1] 106  ஆத்திரேலியா சிம்பாப்வேயின் கொடி ஹராரே, சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழகம் 2014 வெற்றி
[2] 126  ஆத்திரேலியா சிம்பாப்வேயின் கொடி ஹராரே, சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழகம் 2014 தோல்வி
[3] 121  சிம்பாப்வே சிம்பாப்வேயின் கொடி ஹராரே, சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழகம் 2014 வெற்றி

இருபது20 அனைத்துலக சதங்கள்[தொகு]

பிரான்சுவா டு பிளெசீயின் இருபது20 அனைத்துலக சதங்கள்
ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு நிகழ்விடம் ஆண்டு முடிவு
[1] 119 22  மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்கா கொடி ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா புதிய வான்டெரெர்சு அரங்கம் 2015 தோல்வி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 (in en) IPLT20.com - Indian Premier League Official Website, https://www.iplt20.com/teams/chennai-super-kings/squad/24/Faf-du-Plessis/, பார்த்த நாள்: 2018-05-11 
  2. Scorecard, Wisden India, http://www.wisdenindia.com/scorecard/Australia-v-South-Africa-Test-Series-2012/2nd-Test/Australia-vs-South-Africa/34883.html, பார்த்த நாள்: 2012-11-26 
  3. Du Plessis to lead South African Twenty20 side, Wisden India, http://www.wisdenindia.com/cricket-news/du-plessis-lead-south-african-twenty20-side/40030, பார்த்த நாள்: 2012-12-12 
  4. Du Plessis takes over as T20 skipper, Wisden India, http://www.wisdenindia.com/cricket-news/du-plessis-takes-t20-skipper/51575, பார்த்த நாள்: 2013-02-20 
  5. "De Villiers steps down as Test captain". பார்த்த நாள் 13 January 2018.
  6. "De Villiers steps down as ODI captain, available for Tests". பார்த்த நாள் 13 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சுவா_டு_பிளெசீ&oldid=2713900" இருந்து மீள்விக்கப்பட்டது